பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என்.அண்ணாதுரை 33 தன்மையுடனும் விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்தினர் நடந்து கொண்டனர், நிம்மதி, ப்ரூனோவுக்குச் சில காலமே பிடித்தது பிறகோ அவருக்குப் போரிடவேண்டும் என்ற எண்ணம் துளைத்தது. கொள்கையை, மறுப்போலிருக்கும் இடத்தி லெல்லாம் சென்று பரப்புதல் வேண்டும்; அறிவுப் போர் வாழ்வின் குறிக்கோள் என்று கருதினார். போர்வீரன் மனம் களம் காணாது, கழனியில் கதிரின் அழகுகண்டு காலந் தள்ளுவதற்கு ஒருப்படுமோ ! திறம்வந்த நாள் முதல் போரிட்டே பழக்கமாகிவிட்டது ! ப்ரூனோ மடாலயத்தில் சேருவதற்கு முன்பு தாயும். சிற்றப்பாவும். ப்ரூனோவை போர் வீரனாக்கவே விரும்பி னார்கள். ப்ரூனோவேதான், அறிவுபெற மடாலயம் செல் வேன் என்று கூறினான். மக்களை மக்கள் காரணமற்றுக் கொன்று குவிக்கும் போர் முறைபை, சிறுவன் ப்ரூனோ. தாயிடம் கண்டித்து, வெறுத்துப் பேசினான். "எவனே சோம்பேறிச் சீமான் சண்டையிடச் சொல்வான். அவனுக் காக என்போன்ற ஏழையைக் கொல்ல நான் செல்ல வேண்டுமா?" என்று கேட்டான். தாயின் உள்ளம் மசுனுடைய நேர்மையும் ஈரமும் கொண்ட உள்ளத்தைக் கண்டு பூரித்துப்போயிருக்கும்! அவள் என்ன கண்டாள். பாபம், ப்ரூனோ .வேறோர் பயங்கரப் போருக்குச் செல்வான் என்பதை. போர் உள்ளம் கொண்ட ப்ரூனோ, நிம்மதிதந்த விர்ட் டன்பர்க்கைவிட்டு, பிராங்பர்ட், பதுவா போன்ற இடங்கள் சென்றார். எ-3