பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 39 தறிவு கொள்ளத் துணிபவரின் இரத்தத்தைப் பிழிந்து எடுத்து, அவனுக்குக் காட்டி இன்பம் பெற்றனர். ஜியார்டானோ ப்ரூனோ, ஆறு ஆண்டுகள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டான் ! உடலில் இன்னும் கொஞ்சம் வலுவிருக்கிறது. பிடிவாதம் குறையவில்லை. இன்னும் சில நாட்களில் பயல் பணிந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டனர் அந்த அக்ரமக்காரர்கள் அது போலப் பலரைப் பணியவைத்தார்கள் ! ஆனால் ப்ரூனோவை அவர்கள் அடிக்கடி காண முடியுமா? அவர் அவர்களுடைய முறை கண்டு, மனம் உடைய வில்லை. தகுந்த விலை கொடுக்கிறோம். என்றே எண்ணிக் கொண்டார். இந்த மகா பாவி, என்ன வெல்லாம் சொன்னான். சொல்லு தம்பீ," என்று வாலிபச் சீமானை. ப்ரூனோ எதிரே கொண்டுவந்து நிறுத்தி வைத்துக் கேட்டனராம் ஒரு நாள்- அவன் குளறினான், " ஐயன்மீர்! ஏன் அந்த அறியாச் சிறு வனை இம்சிக்கிறீர்கள். நானே கூறுகிறேன் கேளும்" என்று கேலியாகப் பேசினாராம் ப்ரூனோ. இவ்வளவு இம்சைக்குப் பிறகும் இவனிடம் பிடி வாதம் இருக்கிறதே என்று திகைத்த அந்தத் தீயர்கள் ப்ரூனோவைத் திருத்தலத்துக்கே அனுப்பிவிடத்தான் வேண் டும் என்று தீர்மானித்தனர்-ப்ரூனோ, ரோம் நகர் கொண்டு செல்லப்பட்டாளி மோட்சலோகத் திறவுகோல் உள்ள திருத்தலமல்லவா, ரோம் ! இரண்டாண்டுகள் அங்கே சிறை? அவ்வப்போது, மத நூல் வல்லுநர்கள் ப்ரூனோவை விசாரிப் பர் - ஒவ்வோர் முறையும், ப்ரூனோவின் அறிவுத் தெளிவு அவர்களைத் திகைக்கச் செய்தது. இறுதியில். இவன்