பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 எட்டு நாட்கள் திருத்தப்படமுடியாத நாத்தீகன்' என்று திருச்சபையினர் நீர்ப்பளித்து. இந்தப் பாளியின் இரத்தம் மண்ணில் விழாத படி இவனைக் கொல்க! என்று கட்டளையிட்டு அதனை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை அறமன்றத்துக்கு அளித்தனராம். இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம்! ஆறு ஆண்டு கள் அந்த வெனிஸ் நகரச் சிறையிலே இரத்தமும் சதையும் கலந்து கலந்து வெளிவந்தது-இப்போது இரத்தம் கீழே சிந்த லாகாது என்றனராம் / என்ன பொருள் அதற்கு? உயிரோடு கட்டிவைத்துக் கொளுத்து என்பதாகும். ஆண்டு பலவாக அவர்கள் படித்த மத ஏடுகள் ஏராளம் ஐயன் அருளும் உடையார் என்று கூறப்பட்டது - அவர் களால் ஒரு 'நாத்திக னுடன் வாதிட்டு. அவன் கொள் கையை முறியடிக்க இயல வில்லை-உயிரோடு கொளுத்திவிடு என்றுதான் கூறமுடிந்தது, என்செய்வார்கள் அவர்கள்! அவனுடைய அறிவு கிளப்பும் புரட்சித் தீ, மடாலயத்திலே குன்றெனக் குவித்துவைத்துள்ள மத ஏடுகளைச் சுட்டுப் பொசுக்குகிறதே! தப்ப வழியில்லை, எனவே அவனைத் தீயிலே தள்ளு என்றனர். " நாத்திகன்--எனவே நாதன் இவனைத் தண்டிப்பார். நிச்சயமாக என்று கூறிடக்கூட இவர்களுக்கு, நம்பிக்கை இல்லை! ஒருவேளை, அவர்கள் ஆண்டவனின் தீர்ப்புக்கு இந்த வழக்கை விடலாகாது, ப்ரூனோ பக்கம் தீர்ப்புக் கிடைத்தாலும் கிடைத்துவிடும் என்று அஞ்சினர் போலும்/ ஆத்திகத்தைக் காத்திட அரண்மனைகளும் மாளிகைகளும் மட்டுமல்ல, சிறு குடில்கள் இலட்ச" இலட்சமாக உள்ளன- இதனை ஒரு ப்ரூனோவின் கொள்கை என்ன செய்துவிட