பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டு நாட்கள் பாண்டவரே முன்னின்று. கோபர்னிகசின் கொள்கையைக் கண்டிக்கவேண்டி நேரிட்டது ! கொளுத்திவிட்டளர் ப்ரூனோவை. கொள்கையோ, மடியவில்லை. போப்பின் சாபம் வீசப்பட்டது-அப்போதும் சாகவில்லை - கொள்கை வளர்ந்தது --- புதுப்புது ஆராய்ச்சியாளர்கள் தோன்றலாயி னர் - ப்ரூனோவின் சார்பிலே பேசப் பலர் முன்வந்தனர். 278 ஆண்டுகள் போரிட்டுப் பார்த்தது தேவாலயம்/ உலகம் உருண்டை என்பதையும், சுற்றி வருகிறது என்பதையும் ஏற்க மறுத்தது. கடைசியில், களத்தைவிட்டு தேவாலயத் தாரே ஓடிவிட்டனர், ப்ரூனோக்கள் அல்ல ! ஒரு ப்ரூனோ வைக் கொளுத்திவிட்டால் வேறு ப்ரூனோக்கள் கிளம்ப மாட்டார்கள் என்று எண்ணியவர்கள் ஏமாந்தனர். பல் கலைக் கழகங்களும், ஆராய்ச்சிக் கூடங்களும்,வேக வேக மாக புத்தறிவின் சார்பிலே, படை திரட்டித்தந்தன ! என்ன மர்மமோ? என்ன மாயமோ? என்று மக்கள் கேட்டுக் கிடந்த பல நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களுக்கும் விளக்கம் அளிக்க முன்வந்தனர் ஆராய்ச்சியாளர்கள் - பழமைப்படை புறமுதுகிட்டோடிற்று. கடைசியில், ப்ரூனோவிடம் மத உலகு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது போல, 1821-ம் ஆண்டு ஏழாம் பயஸ் எனும் போப்பாண்டவர், கோபர்னி கஸ் கொள்கைமீது இருந்த கண்டனத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார்! மதவாதிகளும், உருண்டை உலகில் வாழச் சம்மதித்தனர் இந்தப் பெரு வெற்றிக்காக, ப்ருனோ தீயிலே தள்ளப் பட நேரிட்டது. எட்டு நாட்களில் அவருடைய மனதிலே ஒரு துளி மருட்சியோ, மயக்கமோ கிளம்பி இருந்தால், போதும். அவர் உயிர் தப்பியிருக்கும். ஆனால் புத்தறிவு பிணமாக்கப்பட்டிருக்கும். ப்ரூனே. உண்மை பிழைக் கட்டும். என் உடல் சாம்பலாகட்டும் என்றார். எட்டு