பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என். அண்ணாதுரை 45 நாட்களிலே, அவர் மாக் கண்முன் தோன்றித் தோன்றி மறைந்த காட்சிகள் எத்தனையோ ! துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்தை எண்ணிக் கொண்டாரோ ! மடாலயத்திலே துருவித் துருவிப் படித்த நாட்களை எண்ணிக்கொண்டாரோ? அன்பு பொழிந்த தாயையும், அக்கறை காட்டிய தந்தையை யும் எண்ணியிருப்பார்! அவர் மனக் கண்முன் நடுக்கும் குரலுடன் பேசும் ஆன்ஸ்லம் பாதிரியாரும் திகைத்து நிற் கும் என்ரி மன்னனும், தேள் கொட்டியவர் போல அலறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், தெரிந் திருப்பர் ! காட்டிக்கொடுத்த கயவனைக் கண்டிருப்பார் பயத்துக்கு அடிமைப் பட்டவன். பரிதாபத்துக் குரியவன் என்று எண்ணியிருப்பார். எட்டு நாட்கள் தானே ! விரைவிலே ஓடிவிடும். கதையும் முடிந்துவிடும் என்று எண்ணி இருந்திருப்பார். என் அவர் தம் எண்ணத்தை வெளியிட வாய்ப்பில்லை விஷம் தரப்பட்ட சாக்ரடீசுக்கு. கடைசிப் பொழுதில், கண்பர்கள் உடனிருந்தனர்-உலகு அவருடைய எண்ணங் களை ஓரளவு அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. ப்ரூனோவுக்கு அஃதும் இல்லை ! ஆனால், சொல்லவேண்டியதை ப்ரூனோ, நாடுபல சுற் றிச் சொல்லிவிட்டார்! ஒரு வாழ்நாளில் செய்யவேண்டிய தைச் செய்துவிட்டார் ! பல்கலைக் கழகங்கள் எல்லாம், உலகம் உருண்டையா? தட்டையா? என்று விவாதித்த வண்ணம் உள்ளன. தெளிவறியா மக்கள் மட்டுமே. புத் தறிவைக் கொள்ள பீதி அடைகின்றனர். வேலை முடிந்து விட்டது போலத்தான் அரியதோர் உண்மையை உலகு ஏற்றுக்கொள்வதற்காக. என் பணிைைகயாகட்டும் என்று, எண்ணியிருப்பார்! அந்தத் தூய்மையாளன் உள்ளத் -