பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 எ நாட்கள் 1 திலே, இத்தகு உயர் எண்ணங்களன்றி வேறென்ன மலத் முடியும். எட்டு நாட்கள் ஓடின ; மதவாதிகள் ஏமாந்தனர் ப்ரூனோ வெற்றி பெற்றார் சதுக்கத்திலே, ஏராளமான கூட்டம் - வேடிக்கை பார்க்க. நாத்தீகனைக் கொளுத்தப்போகிறார்கள், ஆத்தீகர் களுக்கு அந்த வாண வேடிக்கை'யைக் காண்பது தவிர வேறு வேடிக்கை இருக்க முடியுமா ! வேடிக்கை மட்டுமா அது -பக்தரின் கடமையுமாயிற்றே! ப்ரூனோவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்தனர்-பாவி களுக்கு. வேத நிந்தகருக்கு. மஞ்சள் நிற ஆடை தருவது வாடிக்கை. அந்த உடையிலே, பேய் பூதம் பிசாசு, பெரு நெருப்பு. போன்ற சித்திரங்கள்-இவன் நரகம் செல்கிறான் என்பதைக் காட்ட இழுத்துச் செல்கிறார்கள் ப்னோவை! ஏறு நடை! கலங்கா உள்ளம்! பன்னகைகூடத் தெரிகிறது. இரு மருங்கிலும் கூடி நிற்கும் ஏதுமறியாதவர்கள். தூற்றுகிறார்கள் -ஏசுகிறார்கள்! ப்ரூனோ அர்களைக்கண்டு கோபம் கொள்ளவில்லை, ஓடி வருகிறார் ஒரு சாமியார் மரத்தாலான சிறு சிலுவையை ப்ரூனோவின் முகத்திற்கெதிரே காட்டுகிறார் சாகுமுன் சிலுவைக்குப் பணியட்டும் என்று! சிலுவை! இதன் பெயர் கூறிக்கொண்டு எவ்வளவு அக்ரமத்தைச் செய்கிறீர்கள், அறிவிலிகளே! என்று கேட்