பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 உடன்பிறந்தார் இருவர் தூங்கிக்கொண்டிருக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்பு கின்றன. இதே கேள்விகள். அவர்கள் மனதிலே ஆயிரம் முறை எழும்பின - அடங்கின ! மாளிகைகளைக் காணும்போதெல் லாம் இந்தக் கேள்விகள், மனதைக் குடைந்தன! பசும் வயல்களிலே முற்றிக் கிடக்கும் கதிர்களை அறுவடை செய்த போதும், பழமுதிர் சோலைகளிலே பாடுபட்ட போதும். பாதை ஓரத்தில் நின்று பட்டுடைக்காரருக்கு மரியாதை செய்தபோதும், அவர்கள் மனதிலே இந்தக் கேள்விகள் எழுந்தன 1 ஆலயங்களிலே கோலாகல விழாக்கள் நடைபெற்ற பொழுதெல்லாம் இந்தக் கேள்வி ! ஆடல் பாடல் அரங்கங் களிலிருந்து களிப்பொலி கிளம்பிய போதெல்லாம் இந்தக் டூகள்வி! மதுவும் மமதையும் தலைக்கேறிய தருக்கரின் சிவந்த கண்களையும், சிங்காரச் சீமாட்டிகளின் பல வண்ண ஆடைகளையும் கண்டபோ தெல்லாம் இந்தக் கேள்வி! உழைத்து அலுத்து, உண்டது போதாததால் "இடும்பை கூர் என் வயிறே" என்று ஏக்கமுற்ற போது - இந்தக் கேள்வி சகதியில் புரண்டபோது இந்தக் கேள்வி - பன் முறை, இக்கேள்வி மனதிலே எழுந்ததுண்டு - நிலைமை தெரிகிறது -- தெரிந்து? 1 தாயகத்தின் மணிக்கொடி வெற்றிகரமாகப் பறந்து, ஒளி விடுகிறது. வாகை சூடுகிறார்கள் மாவீரர்கள்-விருந் துண்கிறார்கள் சீமான்கள் - விருகளளிக்கும் விழாவுக்குக் குறைவில்லை. ஆண்டவர்களையும் மறக்கவில்லை. அழகழ கான கோயில்கள். அலங்காரம். திருவிழா-இந்த வேலைப் பாடுகள் குறைவற உள்ளன-நமக்குத்தான். இருக்க இல்லம் ல்லை.வாழ்வில் இன்பம் இல்லை