பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டி. என். அண்ணாதுரை 51 தாயகம். மாற்றாரை மண்டியிடச் செய்திருக்கிறது- வெற்றிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன-மண்டலங் கள் பிடிபட்டன. மாநகர்கள் தரைமட்டமாக்கப்பட்டன, கொன்று குவித்தது போக மிச்சம் இருப்பவர்களை. அடிமை களாக்கி, வீரம் அறிவிக்கப்படுகிறது! தாயகம்! கெம்பீரம், வீரம்,வளம், எனும் அணி பணிகளுடன்!! ஆனால். நமக்கோ ஒண்டக் குடிசையில்லை. நாமோ, தாயகத்தின் வெற்றிக்காகக் குருதிகொட்ட அழைக்கப்படு கிறோம். முரசு கேட்டதும் பாய்ந்து செல்கிறோம். மாற்றான் புறமுதுகு காட்டும்வரை போரிடுகிறோம். தாயகம்! தாயகம்!! என்று தளபதிகள் களத்திலே முழக்கமிடும்போது, எழுச்சி கொள்கிறோம். எத்தனை பேர் எதிரிகள், என்ன ஆயுதம் நம்மிடம், என்பது பற்றிய கவலையற்றுப் போரிடுகிறோம். பிணங்களைக் குவிக்கிறோம், பிறந்த நாட்டின் பெருமைக் காக--ஆனால் அந்தப் பிறந்த நாட்டிலே, நமக்கு உள்ள நிலை என்ன? அந்த வீர இளைஞன் கூறியது போல, காட்டு மிருகங்களைவிடக் கொடுமையானது! நமக்கும் தானே இது தாயகம்? நாம். அவ்விதம்தான் கருதுகிறோம். ஆனால், நாடாளும் நாயகர்கள். அவ்விதம் கருதுவதாகத் தெரிய வில்லை, கருதினால், நம்மை இந்தக் கதியிலா வைத்திருப்பர் நியாயமான கேள்வி கேட்டான் இளைஞன், நேர்மையாளன்! அஞ்சா நெஞ்சன் ! ஏழை பங்காளன் !! மக்கள் வாழ்த்துகின்றனர் தம் சார்பாகப் பேசும் இளைஞனை - அவனோ. வாழ்த்துப்பெற, உபசார மொழிகளை வழங்குபவனல்ல. அவன் உள்ளத்திலே தூய்மையான ஒரு குறிக்கோள் இருக்கிறது- கொடுமையைக் களையவேண்டும் என்ற குறிக்கோள்; உறுதிப்பாடு,