பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என் அண்ணாதுரை 50 சமரசம் ஏற்பட வழி கண்டனர். வெள்ளை உள்ளத்தினரான பிளபியன்கள், இனி நம்மை அன்புடனும் மதிப்புடனும் நடத்துவர் என்று நம்பி, ஒருப்பட இசைந்தனர். ! இந்த ஏழைகள் கடன் படுவர். சீமான்கள் அட்டை என உறுஞ்சுவர் இரத்தத்தை. வட்டி கடுமையானது ஏழை, வட்டியுடன் கூடிய கடனைச் செலுத்தும் சக்தியை இழந்ததும், அவன், தன்னையே சீமானுக்கு அடிமையாக விற்றுவிடுவான். குடும்பம் குடும்பமாக இப்படி அடிமைக் ளாவர். இந்தக் கொடுமையை ஒழிப்பதாக வாக்களித்தனர். அதுவரை செலுத்திய வட்டித் தொகையை, கடன் தொகை யிலே கழித்துக்கொள்வது. மீதம் இருப்பதை மூன்றாண்டு களில் செலுத்துவது. அடிமைகளை விடுதலை செய்வது. என்று ஏற்பாடாயிற்று. ஏழை மக்களின் உரிமைகளைக் கேட்டுப் பெறவும், அரசியலில் அவர்களுக்குப் பங்கு இருக்கவும். ட்ரைப்யூன் எனும் அதிகாரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதென்றும் ஏற்பாடாயிற்று. இந்த ட்ரைப்யூன்கள். பெரிதும் சீமான்களே கூடி சட்ட திட்டம் நிறைவேற்றும் செனட் சபையின் முடிவு களை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் என்றும் ஏற்பாடா யிற்று. ஏட்டளவில் பார்க்கும் போது. ஏழைகளுக்கு இது மகத்தான வெற்றிதான். கலப்பு மணத்துக்குக்கூடத் தடை யில்லை என்றனர், கனதனவான்கள் கான்சல் எனும் உயர் பதவிக்குக்கூட பிளபியன்கள் வரலாம். தடை கிடையாது என்றனர். இவைகளைவிட முக்கியமான ஓர் ஏற்பாடும் செய்யப் பட்டது நிலம் ஒரு சிலரிடம் குவிந்து போவதால், கூலி 1