பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

.60 உடன் பிறந்தார் இருவர் மக்களாகப் பெரும்பான்மையினர் ஆகிவிடும் கொடுமை ஏற்படுவதால், இனி யாரும் 330 ஏகருக்கு மேல் நிலம் வைத் துக்கொள்ளக் கூடாது, என்று சட்டம் ஏற்பட்டது! இனியும் என்ன வேண்டும்/ நிலம் ஒரு சிலரிடம் குவியாது! கடனுக்காக அடிமைகளாக்கும் கொடுமை கிடையாது. கலப்பு மணம் உண்டு. கான்சல் பதவி வரை யில் அமரலாம்! ஏட்டளவில் இந்தத் திட்டம் இருந்துவந்தது. ஆனால் சீமான்கள் இதைக் கவையற்றதாக்கி வந்தனர். சட்டத் தைத் துணிந்து மீறினர்- அதன் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொள்வர். ஏழையின் இன்னல் ஒழியவில்லை : பொங்கி எழுந்த ஏழையரை அந்த நேரத்தில் தட்டிக் கொடுத்தனர், பிறகோ எப்போதும் போல ஏய்த்தனர். சீமான்கள், தன் குடும்பத்தார். உற்றார் உறவினர். அடுத்துப் பிழைப்போன் ஆகியோருடைய பெயரால் நிலங் களை அனுபவித்து வந்தனர் ஏழையின் வயல், எப்படியும் தன்னிடம் வந்து சேரும் விதமான நடவடிக்கைகளை நய வஞ்சகர்கள் செய்து வந்தனர். டைபிரியஸ் கிரேக்கஸ். இந்த அக்ரமத்தைக் கண்டான். வாயில்லாப் பூச்சிகளாக உள்ள ஏழை எளியவருக்காகப் பரிந்துபேச முற்பட்டான். கவனிப்பாரற்றுக் கிடந்த தங்கள் சார்பில் வழக்காட ஒரு வீர இளைஞன் முன்வந்தது கண்டு. மகிழ்ச்சியும் நம்பிக்கை யும் பெற்ற பிள பியன்கள், டைபீரியசுக்குப் பேராதரவு அளித்தனர். டைபீரியசும். கெயசும். சிறுவர்களாக இருக்கும் போதே தந்தையார் காலமானார். சிறுவர்களைத் திறமிகு இளைஞர்களாக்கும் பொறுப்பு, தாயாருக்கு வந்து சேர்ந்தது: அதனை அந்த அம்மை, பாராட்டத்தக்க விதமாக நடாத்தினார். கல்வி கேள்விகளில் சிறந்தனர் - போர்த் திறன் பெற்றனர்