பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 உடன்பிறந்தார் இருவர் தாக்கவரும் மாற்றானைத் துரத்திச் சென்று, அவனுடைய மாநகரை தரைமட்டமாக்குவது, அனைவராலும் சாதிக்கக் கூடிய செயலல்ல!! செல்வர்கள், அதிலும் செருமுனை சென்று வெற்றி கண்டவர்கள், இதுபோலத்தானே ஏளனம் பேசுவர், அறிவுத் துறையிலே ஈடுபடும் இளைஞர்களைக் கண்டு. டைபீரியஸ், இந்த ஏளனத்துக்கும் இடமளிக்கவில்லை. களத்திலே தன் கடமையைச் செம்மையாகச் செய்தான். நியூமான்டைன்ஸ் என்னும் நாட்டாருடன் நடந்த பெரும் போரில், டைபீரியஸ் காட்டிய வீரம், சாமான்யமானதல்ல. மான்சினஸ் எனும் படைத்தலைவன். டைபீரியசின் வீர தீரத்தைக் கண்டது மட்டுமல்ல, களத்திலே ஒரு சமயம். எதிரிகளால் சுற்றிவளைத்துக் கொள்ளப்பட்ட நேரத்தில், டைபீரியசின் யோசனையால் பெரிதும் பயன் கண்டவன், மாற்றாரிடம் சென்று சமரச ஏற்பாடுகளைத் திறம்படப் பேசி, பேராபத்தில் சிக்கிக்கொண்ட, ரோம் நாட்டுப் பெரும் படையை மரணத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த பெருமை, டைபீரியசுக்குக் கிடைத்தது, குறைந்தது இரு பதினாயிரம் ரோமான்ய வீரர்கள் டைபீரியசினால் பிழைத் தனர். டைபீரியஸ் கிரேக்கஸ். பொதுப்பணியிலே. நேர்மை யைக் கடைப்பிடித்து ஒழுகினவன் - களத்திலே, மாற்றார் களிடம் அவனுடைய கணக்கேடு சிக்கிவிட்டது- நாட்ட வர், கணக்குக் கேட்டால். என்ன செய்வது என்ற கடமை உணர்ச்சியால் உந்தப்பட்ட டைபீரியஸ், மாற்றார் நகருக்கு மீண்டும் ஓர்முறை சென்று, கணக்கேட்டைக் கேட்டுப் பெற்றுவந்தான், இதனைக்கூட. சூதுக்காரச் சீமான்கள், திரித்துக்கூறி டைபீரியஸ்மீது கண்டனம் பிறப்பித்தனர், ஆனால் டைபீ