பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

BO உடன் பிறந்தார் இருவந் ணம் கொள்ளக்கூடிய வாலிபப் பருவம்தான். எனினும். கெயஸ் அறிவாளி. பழிதீர்த்துக் சொள்ளத்தான் வேண்டும். ஆனால், யார் மீது ? நாசிகா மீதா ? செச்சே ! அவன் மந்தை யிலே ஒருவன் ! அவன்மீது மட்டும் வஞ்சம் தீர்த்துக் கொண்டால் பயன் என்ன ? உருவத்தால் வேறு வேறு எனினும், செல்வர் எல்லாம் உணர்ச்சியால் நாசியாக்கள் தாமே! எனவே ஒருவனைக் கொன்று என்ன பயன் ? முறையை ஒழித்தாக வேண்டும் ! உலவுவது ஒரு அரவம் அல்ல; புற்றிலே பல: புற்றோ பலப்பல; அடவியிலே உள்ள புற்றுக்களோ ஏராளம். எனவே அடவியையே அழித்தாக வேண்டும். அண்ணன் தொடுத்த அறப்போரை தொடர்ந்து கடத்தி வெற்றி காணவேண்டும், மாண்புமிக்க முறையிலே பழி தீர்த்துக்கொள்ளும் முறை இதுதான் என்ற முடிவுக்கு வந்தான் கெயஸ். அந்தப் பெரும் பணிக்காகத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தான். வீரமும் அறிவும் நிரம் பியவன்: அண்ணன் மாண்ட சம்பவம் கெயசுக்கு நல்லா சான் தரும் பாடமாக அமைந்தது. குறிக்கோளுக்காக அண்ணன் உயிரை இழந்தான் அந்தத் தியாக உள்ளம் நமக்கும் உண்டு என்பதை நிலை நாட்ட வேண்டும். சந்தைச் சதுக்கத்திலே அண்ணனைக் கொன்று போட்டனர்: உடலைக்கூட ஆற்றிலே போட்ட னரி. இதைக் கண்டு, இனி எவர்தான் ஏழைக்காகப் பரிந்து பேச முன்வருவர்! என்று எக்காள மிடுகின்றனர் அந்த டைபீரியசின் எத்தர்கள். இதோ நான் இருக்கிறேன் இளவல், அறப்போர் நடாத்துவேன். டைபீரியசின் தம்பி என்ற நிலைக்கு மாசு ஏற்பட விடமாட்டேன். அண்ண னிடம் கண்ட அதே ஆர்வம். அதே நெஞ்சு உரம், ஆற்றல் தம்பியிடம் இருக்கிறது என்று நாடு காணவேண்டும். அதே துறையிலே நான் பணியாற்றாது போவேனாகில், நான்