பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 81 டைபீரியசுக்குத் துரோகமிழைத்தவனாவேன், என் குடும்பக் கீர்த்தியைக் கருக்கியவனாவேன். சந்தைச் சதுக்கத்திலே அவரைச் சாகடித்த போது, உயிர் பிரியுமுன், என் அண்ணன் என்னென்ன எண்ணி னாரோ! அவர் மனக் கண்முன் என்னென்ன காட்சி தெரிந் ததோ ! அறப்போர் முதல் கட்டம் முதல் பலி ! இனி யார் முன்வருவார்கள்? அறப்போர் தொடர்ந்து நடை பெறுமா? அல்லது கொல்வார்களே என்று குலை நடுக்கம் பிறந்து, அனைவரும் ஒடுங்கிவிடுவார்களா? எதிர்காலத்தில் என்ன நடைபெறும் ? யார், என் கொள்கையை மேற் கொண்டு போரிடுவர்? என்றெல்லாம் எண்ணியிருப்பார்! என்னைப்பற்றி எண்ணாமலா இருந்திருப்பார் ! என் தம்பி இருக்கிறான் கெயஸ். அவன் வாளா இருக்கமாட்டான். அவனிடம் ஒப்படைக்கிறேன் அறப்போர் நடாத்தும் பேரும் பொறுப்பை, என்று எண்ணியிருப்பாரா ! இறந்து படுமுன்னம் அவர் இதயத்திலே இந்த எண்ணங்கள் எழா மலா இருந்திருக்கும்? நிச்சயம் எண்ணியிருப்பார். ஒரு கணம். நம்பிக்கைகூடப் பிறந்திருக்கும். நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கத்தான் செய்யும். நான் வேறு எதற்கு இருக்கிறேன். தம்பி! என்று அழைத்தாரோ- 'தம்பி இருக்கிறான் தருக்கர்களே ! என்னைக் கொன்று போட்டுவிட்டால், போர் ஓய்ந்துவிடும், வெற்றி உங்களுக் குக் கிட்டிவிடும் என்று எண்ணாதீர், ஏமாளிகளே ! தம்பி இருக்கிறான். என் வேலையை அவன் தொடர்ந்து செய்து வருவான். உங்களை வீழ்த்த வீரன் இருக்கிறான் -- நான் கடைசி அல்ல - நான் துவக்கம்-" என்று முழக்கமிட்டி ருப்பாரோ? கெயஸ் கிரேக்கசின் உள்ளம் இவ்றெல்லாம் பேரா மலிருந்திருக்க முடியுா? எ - 6