பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 85 முறையும் கண்டு, தாராளமாகப் பலரும் உதவினர், கொட்டும் குளிரினின்றும் தப்பிய போர் வீரர்கள் வாழ்த் தினர். கெயஸ் கிரேக்கசின் நற்குணத்தைப் பாராட்டி, வெளி நாட்டு வேந்தன், ரோம் நாட்டுப் படைக்கு, உணவு தானியம் அனுப்பி வைத்தான். இந்தச் 'செய்தி' ரோமுக்கு எட்டிற்று, சீமான்களைக் கொட்டிற்று! நாட்டுப் படையிலே பணிபுரியும் ஒரு இளைஞன், பிறர் மனதைக் கவரும் பண்புடன் இருக்கிறான். அதனால் நாடு பயன் பெறுகிறது என்றால், நாட்டிலே மற்றையோர், அதிலும், வயதாலும் பதவியாலும் பெரியோர் ஆயினோர் மகிழத்தானே வேண்டும். ஆம்! என்போம் தயக்கமின்றி. அப்படி இருந்ததில்லை என்கிறது வரலாறு!! ஒருவன், செல்வாக்கு அடைகிறான் என்ற உடன் பொறாமை. பொச்சரிப்பு அச்சம், இவையே எழுகின்றன ஆதிக்க உள்ளம் கொண்டோருக்கு. அதிலும் புகழ் பெறுபவன். யார்? அச்ச மூட்டிய பெயர் டைபீரியஸ்! அவன் தம்பி, இவன்/ இவனும், செல்வாக்குப் பெறுகிறான் ! புதிய ஆபத்து !!-- என்று சீமான்கள் எண்ணினர். கெயஸ் கிரேக்கஸ் செவிக்கு விஷயம் எட்டிற்று. எரிச்சலாயிற்று -ரோம் சென்றான். கேட்போர்க்கு விளக்கம் தரலாம் என்று. "களத்திலே படைத் தலைவன் இருக்கிறான்-உடன் இருக்கவேண்டியவன் ஊர் திரும்பிவிட்டானே - பெருங் குற்றமல்லவா இது என்று கண்டனம் கிளம்பிற்று: கட்டிக் கொடுத்த சோறு! 10 இந்தக் கண்டனம் ஓசை அளவில் போய்விட்டது. 'என்மீதா கண்டனம், பெரியவர்களே! படைத் தலைவ