பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 உடன்பிறந்தார் இருவர் ருடன் ஓராண்டு தங்கியிருந்தால் போதும், ஓய்வெடுக்கலாம். என்பது முறையாயிருக்கிறது. நானோ மூன்றாண்டுகள் ஊழியம் செய்த பிறகே ஊர் திரும்புகிறேன். இது எங்ஙனம் குற்றமாகும்? பலர் களம் சென்றனர், கொள்ளைப்பொரு ருடன் வீடு திரும்பினர். நானோ பணம் கொண்டு சென் றேன். வெறுங்கையுடன் வீடு திரும்புகிறேன், மதுக்கிண்ண மும் கையுமாக மாடி வீட்டில் இருந்தவர்களெல்லாம் இப்போது. அந்தக் கோப்பைகளிலே தங்கக் கட்டிகளை நிரப்பிக்கொண்டு வந்துள்ளனர். நான் களம் சென்றேன்: கடும் போரில் ஈடுபட்டேன்; பொருளைக் கொள்ளையிட வில்லை: தாயகத்தின் புகழ் வளர்த்தேன் / இது. இந்நாளில் குற்றமா?" என்று கெயஸ் கேட்டபோது. வம்பர் வாய டைத்து நின்றனர். கெயஸ் கிரேக்கஸ், அண்ணன் போன்றே, பொ வேண்டிய பெரு வெற்றி, ரோம் நகரில்தான் இருக்கிறது. என்ற கருத்துக்கொண்டவன். எனவே, மக்களுக்குத் தொண்டாற்ற முற்பட்டான், காப்பாளர்' பதவி பெறத் தேர்தலில் ஈடுபட்டான். ரோம் நகரில் மட்டுமல்ல, இத்தாலி முழுவதுமே வரவேற்றது. கெயஸ் கிரேக்கசுக்கு வாக் களிக்க, வெளி இடங்களிலிருந்து திரளான கூட்டம் வந்தது. நகரிலே அன்று இடநெருக்கடியே ஏற்பட்ட தாம் / முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் என்று முனைந்து வேலை செய்தனர் செல்வர்கள்- வெற்றி பெற்றான் கெயஸ். ஆனால். முதலிடம் கிடைக்கவில்லை. நாலாவது இடம் கிடைத்தது. வாக்கெடுப்பிலேதான், செல்வர்களால் சூதுபுரிய முடி யுமே தவிர, மக்கள் இதயத்திலே கெயஸ் இடம் பெறுவதை எங்ஙனம் தடுத்திடமுடியும்? டைபீரிசியசின் தம்பி! அவன்