பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என்.அண்ணாதுரை 87 போன்றே ஆற்றலுள்ளவன்; ஏழைக்கு இரங்கும் பண் பினன். மக்கள் தலைவனைக் கண்டனர்: டைபீரியஸ் மறைந்ததால் ஏற்பட்ட பெரு நஷ்டம் இனி ஈடு செய்யப் படும் என்று பெருமையுடன் பேசினர். 'மக்கள்! எவ்வளவு பற்றும் பாசமும் காட்டுகிறார் கள். ஆனால், ஆபத்தான சமயத்தில், எவ்வளவு குழப்ப மடைந்துவிடுகிறார்கள். தங்களுக்காக உழைப்பவனை எப் படிப் பாராட்டுகிறார்கள், ஆனால் எத்தர்கள் ஏதேனும் கலகமூட்டினால், எவ்வளவு ஏமாந்து விடுகிறார்கள். என் அண்ணனைக் கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடினார் கள். ஆனால், அவரைக் காதகர் கொன்றபோது. மிரண் டோடிவிட்டார்களே !- என்று எண்ணி கெயஸ் வருந் தினான், மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்குகளை நல்கினர்: காப் பாளர் ஆனான் - அண்ணனுடைய நினைவு நெஞ்சிலே வந்தது மனம் உருகினான். என் வெளிநாட்டார், ட்ரைப்யூனைப் பற்றி இழிவாகப் பேசி யது கேட்டு வெகுண்டெழுந்து காப்பாளரின் கண்ணியத் தைக் காப்போம் என்று போரிட்டனர், மக்கள். மற்றோர் காப்பாளருக்கு சதுகக்த்தில் வழிவிட மறுத்தான் என்பதற் காக ஒருவனைக் கொன்று போடும்படி உத்திரவிட்டனர். மக்கள்! அத்தகைய ரோம் நகரில் அன்பர்களே! அண்ணன் டைபீரியஸ் கிரேக்கசை, உங்கள் 'காப்பாளரை கொடியவர்கள் கொன்றனர்-உடலை வீதியில் இழுத்துச் சென்றனர் - ஆற்றில் வீட்டெறிந்தனர். உங்கள் கண்முன் னால் நடைபெற்றது. இந்தக் கொடுமை. கண்டீர்கள் ; என் செய்தீர்கள்!" என்று கெயஸ் கேட்டான், நெஞ்சிலே மூண்ட சோகத்தால் உந்தப்பட்டதால், என் சொல்வர்? கண்ணீர் சொரிவதன்றி வேறென்ன பதில் தரமுடியும்?