பக்கம்:எண்ணக்குவியல்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

எண்ணக் குவியல்

 ஏற்படும் நன்மை என்ன?’ என்பதை முதலில் எண்ணு! பிறகு எழுது!

எழுத்துத் தொண்டும், பேச்சுத் தொண்டும்; எல்லாத் தொண்டுகளுக்கும் மேற்பட்ட செயல்தொண்டுக்கு அடுத்த சிறந்த தொண்டுகள் ஆகும். ஆகவே, அச் சிறந்த தொண்டை நீ உலகிற்கும் செய்யலாம்! ஒரு கண்டத்திற்கும் செய்யலாம்; ஒரு பெரிய நாட்டுக்கும் செய்யலாம். ஆனால் அதற்கு முன்னே தாய்நாட்டிற்கும், தாய் மொழிக்கும் செய். பிறகு உன் வலிமையை வளர விடு. அது எவ்வளவு வளர்ந்தாலும் வளரட்டும். அதனால் நாட்டிற்கும் பெருமை; நமக்கும் பெருமைதான்.

நாடு சிறக்க, மொழி வளர, மக்கள் நல்வாழ்வு வாழ, எழுத்தாலும் சொல்லாலும் எப்போதும் தொண்டு செய். அத் தொண்டு மிகு விரைவில் செயல்பட வேண்டுமானால், வெல்லும் சொல்லை வேண்டிய வரையில் பயன்படுத்து!