இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நல்ல அடி
23
மொழியையும் பிறருக்கு விலைகூறி, அதன் மூலம் வாழ வழி வகுத்து வழிநடை நடக்க எண்ணும் மக்களுக்குக் கவிஞர் பாரதியாரின் சொல்லடி ஒரு நல்லடியாய் அமைந்திருப்பது, எண்ணி எண்ணி மகிழக் கூடிய ஒன்றாகும்.
உயர்ந்த அறிஞர்களால் நகைக்கத் தகுந்த இழிந்த மக்கள் இன்றைய தமிழகத்திலிருந்தாலும், பாரதியாரின் அடிகளால் நல்லுணர்ச்சி பெறுவதன் மூலம் எதிர்காலத் தமிழகத்தில் எவரும் இருக்கமாட்டார் என்றே எண்ணுகிறேன். இதைக் கண்ணுறும் அன்பர்களும், நாட்டை ஒரு கண்ணாகவும் மொழியை ஒரு கண்ணாகவும் கருதுகின்ற நல்ல தமிழர்கள் அடங்கிய எதிர்காலத் தமிழகத்தை விரைவாகக் காண ஆசைப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொள்ளுகிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்!
வாழ்க தமிழ்திரு நாடு!