பக்கம்:எண்ணக்குவியல்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவில்லாதவன்

31

கைத்தொழிலைக் கண்டு வியப்படைந்து சென்றார். ஒரு மாகாணத்தின் பிரதம மந்திரி தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது ஒரு மண் ஒட்டன் ஆயுதம் எதுவுமின்றித் தன் கையாலேயே சுவர் வைக்கும் கலையைக்ககண்டு மலைத்துப் போனார். நமது சென்னை மாகாணத்து முன்னைக் கவர்னர் ஒருவர், குயவன் சுழற்றுகிற திரிகையையும், அவன் கைபோகிற போக்கையும், பானை உருவாகிற தோற்றத்தையும் கண்டு அப்படியே வாயைப் பிளந்து நின்றுவிட்டார். தம்பி இவருள் யார் அறிவுடையவர்? யார் அறிவில்லாதவர்?

கூறவேண்டுமானால், "மந்திரிக்கு இருக்கும் அறிவு, மண் ஒட்டனுக்கு இல்லை; மண் ஒட்டனுக்கும் இருக்கும் அறிவு, மந்திரிக்கு இல்லை. கவர்னருக்கு இருக்கும் அறிவு, குயவனுக்கு இல்லை; குயவனுக்கு இருக்கும் அறிவு, கவர்னருக்கு இல்லை" என்றுதான் கூறியாக வேண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், படிப்பில்லாத பெண்களிடம் உள்ள ஒப்பாரி வைக்கும் அறிவு, தொல் காப்பியத்துக்குப் பொருள் கூறும் புலவனிடம் இல்லை என்று கூறிவிடலாம். ஒருவன் தன் அறிவுக்கல்லை வேளாண்மை, மேடைப்பேச்சு, மருத்துவம், வியாபாரம், எழுத்து, இல்வாழ்வு, நிருவாகம், அரசியல் ஆகிய சாணைகளில் தீட்டி, பலபக்கமும் பட்டைதீட்டி பல துறைகளிலும் ஒளி வீசி நிற்பான். மற்றொருவன் இரண்டொரு பக்கங்கள் மட்டும் தீட்டி, அத்துறையில் மட்டுமே ஒளிவீசி நிற்பான். இது உண்மையேயாயினும், இவர்களைக்கூட அதிகமாக அறிவுக்குப் பட்டை தீட்டிக் கொண்டவர்கள், குறைவாகப் பட்டை தீட்டிக்கொண்டவர்கள் என்று கூறவேண்டுமே தவிர, அறிவே இல்லாதவர்கள்