பக்கம்:எண்ணக்குவியல்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் மருந்துகள்
கி. ஆ. பெ. விசுவநாதம்

"ஆங்கில ஆட்சி வந்ததும் சித்த ஆயுர்வேத யூனானி முதலிய நம் நாட்டுப் பரம்பரை வைத்தியங்கள் அழிந்தொழிந்தன. நம் நாட்டுப் பாட்டியின் வைத்தியமும் பார்த்துப் பார்த்து ஓடிவிட்டது. எடுத்ததற்கெல்லாம், ஊசிபோட டாக்டரைத் தேடும் நிலைமையும் வந்தெய்தியது. அதனால், உடம்பு மட்டுமன்றி உயிரும் பாழாகியது. எல்லாம் பாழாகிய பின்னரே, தமிழ் மக்கள் தங்கள் பழைய செல்வங்களைத் தேட முற்பட்டுள்ளார்கள். நாடு விடுதலை பெற்றதும் இம்முயற்சி மிகவும் ஊக்கத்துடன் நடக்கிறது. இதற்கு உதவி அளிக்கும் வகையிலும் பழைய கைம்முறை வைத்தியங்கள் அழியாது பாதுகாக்கப்படவேண்டும் என்னும் அவா மிகுதியானாலும் அறிஞர் விசுவநாதம் அவர்கள் தம் வீட்டுக் கைம்முறைகளில் பலவற்றை இந்நூலுள் தந்துள்ளார், இத்தகைய நூல்கள் இன்னும் வெளிவர வேண்டும். மூல நோய்க்கு ஒன்பது சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. இந்நூல் ஒருவர் கையில் இருப்பதே ஒரு வைத்தியர் உடன் இருப்பதற்கு நிகர் என்று சொல்லலாம். அறிஞர் விசுவநாதம் அவர்கள் இன்னும் பல கைம்முறைகளை அரிதின் முயன்று பெற்று வெளியிடுவாரேல், தமிழ் மக்களுக்குப் பேருதவி செய்தவராவர்!”

'தினகரன்' மதிப்புரை
/15-11-'53


பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை-1