பக்கம்:எண்ணக்குவியல்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுபிறந்த பொன்னாட்டை மறந்து பிற நாட்டிற்குத் தொண்டு செய்யும் பக்தனும், வளர்த்த இன்மொழியை மறந்து பிற மொழிகளுக்குத் தொண்டுசெய்யும் அறிஞனுமே தலை சிறந்த முடத்தெங்குகள்

முடத்தெங்கு

"ட்டி நட அப்பா, எட்டி நட! மாலைப்பொழுது மறைந்துவிட்டதே! இருட்டுமுன்னே வீடு செல்ல வேண்டாவா! நடையைச் சிறிது எட்டிப் போடு!"

"போகலாம் தாத்தா! நிலாக்காலந்தானே! நானிருக்க என்ன பயம்? மெதுவாக நடந்து வாருங்கள்."

"அப்புறம் ஏன் நிற்கிறாய்?"

"ஒன்றுமில்லை தாத்தா! இந்தத் தென்னந்தோப்பு என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது; மிகவும் செழிப்புடையதாய்க் காணப்படுகிறது."

"ஆம் அப்பா! அது இந்த ஊரின் நிலத்தின் பெருமையையும் நீரின் சிறப்பையுமே எடுத்துக்காட்டும். ஏனெனில் மரவகைகளில் மா, பலா, வாழை, கமுகு, தென்னை இவ்வைந்தும் நன்னிலத்துச் சொத்துகள். இவற்றுள் தென்னையும் வாழையும் நார்முதல் வேர்வரை உள்ள யாவும் பயனுடைய பொருள்கள். இதில் வாழை ஒரு பங்கும் தென்னை இருடங்குமாகப் பலவகைக்கும் பயன் பட்டும், பல்வேறு பொருள்களுக்கு மூலப்பொருள்களாய் இருந்தும் வருகின்றன! 'தென்னை வளர்ந்தால் பண்ணை வளரும்’