பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

ஏற்படும் இழிவைக் காட்டிலும், சிறை சென்றவர்களில் பலர், மன்னிப்பு கேட்டு வெளிவந்துவிட்டனர் என்ற நிலை, கொடுமை நிறைந்த இழிவாக நான் கருதுகிறேன்.

காரணம் ஆயிரம் காட்டினாலும், ஜூலை கிளர்ச்சியின்போது, ஏற்பட்ட வெளிவரும் படலம், என் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது; அந்தக் கசப்பான அனுபவம் என் மனதை விட்டு அகல மறுக்கிறது.