பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


இந்த அளவு; அடுத்த தேர்தலில், வாக்குகள் பெறத்தக்க நிலையில், வேறு எந்த கட்சியும் வளர்ந்து இல்லை.

தி. மு. கழகம், தடைச்சட்டம் காரணமாக, கலைகிறது என்றால், சிறை சென்றவர் போக மீதமுள்ளவர்கள் மட்டுமல்ல, ஆதரவு காட்டி வாக்களித்த பல இலட்சக்கடக்கானவர்கள், எவர் பக்கம் தமது ஆதரவினைத் திருப்புவர்; அவர்களின் நடவடிக்கை எவ்விதம் இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.