பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தடைச்சட்டம் எனும் புதிய கருவியைக் களத்திலே, காங்கிரஸ் ஏவுகிறதோ, அதுபோலவேதான் நாமும், தடைச்சட்டத்தைத் தகர்க்க, அதனுடன் மோதிக்கொள்ள ஒரு புதிய கருவியை ஒரு போர்த்தந்திரத்தைக் கண்டாக வேண்டும்.

கொள்கையுடன் கொள்கை மோதுதல், அமைப்புடன் அமைப்பு மோதுதல் என்ற முறையிலே காங்கிரஸ், போர் நடத்தவில்லை; நடத்திப் பார்த்துத்