பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265

தங்குமிடம், கிடைக்காது – உடனடியாக் கிடைக்காது; பலருடைய உள்ளங்களிலே கொள்கை இருக்கும், ஆனால் செயலாற்றத்தக்க நிலை பெற ஒரு வடிவம் வேண்டும் – அந்த அமைப்பு தலைகாட்டும் போதெல்லாம், சட்டம் தாக்கும், அமைப்பை உடைக்கும், மற்றோர் அமைப்பு தேடி கொள்கை அலையும், மற்றோர் அமைப்பு ஏற்பட்டாக வேண்டும், யாரேனும் அவ்விதம்