பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நாற்பதாண்டுகள் நான் கட்டிக்காத்த

அண்ணா தந்த கருவூலம்!

உடன்பிறப்பே,

திருச்சியில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில்; கழகம் தேர்தலில் ஈடுபட்டு ஆட்சி மன்றங்களில் இடம் பெறலாமா? என்ற கேள்வியை முன்வைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு வாக்கெடுப்பு நடத்தினார். தேர்தலில் ஈடுபடலாம் என்பதற்கு மாநாட்டில் கூடியிருந்தோரின் முக்கால் பகுதியினர் வாக்குகள் கிடைத்த காரணத்தால்;

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் தி.மு.க. களம் புகுந்தது. அந்தத் தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களும், திருவண்ணாமலை தீரர் தர்மலிங்கமும் வெற்றி பெற்றனர். சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா உள்ளிட்ட 15 பேர் வெற்றி பெற்று தமிழக அரசியல் அரங்கையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினோம்.

அடுத்து 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்-