பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 27 என்று வல்லிக்கண்ணன் கூறுவது சரியே. ஆனால் "இன்றைய புதுக்கவிதை வசன கவிதைத் தண்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக பரிணமித்திருக் கிறது (இலக்கியவட்டம் ஆண்டு மலர் 1963) என்று அவர் கூறுவதை ஒப்புக்கொள்ள முடியாது. மேலும் வசன கவிதை, இலகு கவிதை, புதுக்கவிதை என்பவற்றிற்கு அவர் விளக்கம் தரவுமில்லை. - - ஆங்கிலத்தில் Prose Poem என்பதைத்தான் நாம் வசன கவிதை என்கிறோம்; 'Free Verse என்பதை 'இலகு கவிதை என்றோ சுயேச்சா கவிதை' என்றோ கூறலாம் என்கிறார்கள். நான் "கட்டற்ற கவிதை' என்று குறிப்பிட விரும்புகிறேன். கட்டற்ற கவிதையில் மரபுக்கவிதையில் காணும் எதுகையும் மோனையும் இருக்கும்; ஒலி நயம் இருக்கும். உணர்ச்சி இருக்கும். யாப்புக் கட்டுப்பாடு பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. புதுமைப் பித்தன் கவிதை களை நாம் இந்த வகையில் தான் சேர்க்க முடியும். கவியரங்கங்களில் பாடியவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ள 'கவியரங்கில் கலைஞர் என்னும் நூல் இதற்கு மற்றுமோர் உதாரணம். வசன கவிதையில் (Prose Poem) ஒலி நயமோ எதுகை மோனையோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நுட்பமான உணர்ச்சியும் சொல்லில் கவிதை வெளிச்சமும் இருந்தால் போதும்; வசனத்தின் உருவத்தையும், கவிதையின் உள்ளடக்கத்தையும் கொண்டு பிறப்பதே வசன கவிதை என்று நாம் குறைந்தபட்ச அளவு கோலை வைத்துக்கொள்வது தவறல்ல' என்னும் என்.ஆர்.தாசனின் கருத்தை நான் ஏற்கிறேன். பாரதியின் வசன கவிதையைப் பார்த்தால் இந்த இலக்கணம் புரியும்.