பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 26 விஷயம் வேறு வடிவில் அமைத்துக்காட்ட முடியாத தென்பதைக் கண்டிருக்கிறேன். ஓர் எளிய, அன்றாடப் போக்கிற்கான பாவம் அவற்றுள் நிலவுகிறது. அவற்றிற்குப் பகட்டான உடையிராது போயினும், அழகான உருவம் இருக்கிறது. அதனால், அவை கவிதைக் குலத்தில் இடம்பெறத் தகுதி வாய்ந்தவை, (ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு, பக்கம் -399) என்று வசன கவிதையைப் போற்றியிருக்கிறார் தாகூர் தாகூருடன் பலவகையிலும் போட்டியிட்ட பாரதி இந்த வசன கவிதைத் துறையிலும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று எண்ணி இருப்பான் போலும். அறிஞர். பி.மகாதேவன் இதைச் சுட்டிக் காட்டுகிறார். | ஆக, தாகூரும் பாரதியும் உணர்ந்து இந்தியக் கவிதைத் தாயின் மடியில் தவழவிட்ட அந்நியக் குழந்தைதான் இந்த வசன கவிதை. "சிறுகதை என்ற இலக்கிய உருவம் மேலை நாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்து கொண்ட சரக்கு" என்று அதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் ரகுநாதன் வசன கவிதையைத் தமிழர் மரபுக்கு ஒவ்வாத விவகாரம் என்று ஒதுக்கிச் சுதேசிக் கப்பலில் ஏறப் பார்ப்பது எனக் கென்னவோ நியாயமாகப் படவில்லை. விருந்து' என்னும் பெயரில் புதிய இலக்கிய வகை புகுவதைத் தொல்காப்பியர் வரவேற்கிறார். பாரதி வசன கவிதையை (Prose Poem) வரவேற்றுக் காட்டினான். நாம் மட்டும் வரவேற்கக் கூடாதா? சரி வசன கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதைப் பார்க்கலாம். - 'தமிழில் வசன கவிதை என்ற நிலை திரிந்து இலக்கணத்துக்கு கட்டுப்படாத இலகு கவிதையாகி’ இன்று ‘புதுக்கவிதை' என்று பெயர் பெற்றிருக்கிறது’