பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tổgm & 25 பாடாத கவியே நல்ல கவி' என்று இலக்கணத்தோடு எழுதும் கவிஞர்களையே இடித்துரைக்கும் கு.அழகிரிசாமி புதுக்கவிதைக்காரர்களை விடுவாரா? இவர்களுக்கு 'எதுவும் தெரியாது’ என்கிறார். அழகிரிசாமியைக் காட்டிலும் ரகுநாதன். புதுக்கவிதைக்காரர்கள் மேல் பாய்கிறார். புதுமைப்பித்தன் கவிதைகளை யாரோ வசன கவிதைகள் என்று சொன்னதற்காக புதுமைப்பித்தன் புதிய உருவ அமைதியில் கவிதை எழுதினாரேயொழிய வசன கவிதை எழுதவில்லை என்று கோபங்கொள்ளும் ரகுநாதன் அந்தக் கோபத்தோடு கோபமாக 'பாரதி அழகிய வசனம் எழுதினானே தவிர வசன கவிதை எழுதவில்லை என்கிறார். அதற்கு சில ஆதாரங்களைக் காட்ட முயல்கிறார் என்றாலும் காட்சி சக்தி காற்று முதலியவற்றிற்கு ‘வசன கவிதை' என்று பாரதி தலைப்புக் கொடுக்கவில்லை" என்று ரகுநாதனால் குறிப்பிட முடியவில்லை. 'பாரதியும் அவற்றைக் கவிதை என்று கூறவில்லை' என்று சொல்லும் ரகுநாதன் 'பாரதியும் அவற்றை வசன கவிதை என்று கூறவில்லை' என்று சொல்ல முடியவில்லை. (இந்த வரியைத் திரும்பப் படிப்பது நல்லது). ரகுநாதன் அழகிய வசனம்', 'அழகிய வசனம்' என்று சொல்வதைத்தான் பாரதி ‘வசன கவிதை' என்று சொல்லியிருக்கிறான். பாரதி ‘வசன கவிதை என்பதை இனங்கண்டுதான் எழுதினான். புதிய புதிய யாப்பு வடிவங்களில் எதையும் சுவையாகச் சொல்லத் தெரிந்த பாரதி ஏன் வசன கவிதை எழுத வேண்டும் என்று கேட்கத் தோன்றும். பாரதி காலத்தில் வாழ்ந்த தாகூர் வசன கவிதை எழுதினார். எனவே அவனும் எழுதினான். 'நான் எத்தனையோ உரைநடைக் கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றின்