பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* எதிர்காலத் தமிழ்க்கவிதை * 24 பழக்கம், கூத்தாடி வேலை. யாப்பை உடைத்தெறிந்து உள்ளப் பெருக்கை அப்படியே கொட்டவேண்டும்: சுதந்திரமாகத் தன் வழியில் போவோனே மகாகவி (The greatest poet is the free channel of himself) stairp அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன் எண்ணினான்: எண்ணியவாறு எழுதினான். அவனைப்போல் டி.எஸ். எலியட்டும் எஸ்ரா பவுண்டும் எழுதத் தொடங்கினார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்த மேல் காற்று தமிழ்த் தோட்டத்திலும் அடிக்கடித் தொடங்கியது. இப்போது இலக்கணம் மீறி எழுதுவோர் தொகை பெருகியுள்ளது. இவர்கள் எழுதும் கவிதையை ‘புதுக்கவிதை' என்கின்றனர். ந.பிச்சமூர்த்திதான் புதுக்கவிதையின் பிதாமகன் என்கிறார் சி.சு.செல்லப்பா. அவருக்கு என்றே ஒரு மரபு தோன்றிவிட்டது என்றும் பெருமைப்படுகிறார் அவர். பிச்சமூர்த்தி புதுக்கவிதை எழுத நேர்ந்ததற்குரிய காரணங்களைத் தம் 'குயிலின் சுருதி'யில் குறிப் பிட்டுள்ளார். யாப்பு என்ற சொல்லுக்கு விலங்கு என்ற பொருள் இருக்கக் கண்டு தளை முதலியவற்றை எடுத்தெறிந்து பாடத் தொடங்கியதாக அவர் கூறுவது ஒரு காரணம். மற்ற இரண்டு காரணங்கள் நான் முன்னமே குறிப்பிட்ட வால்ட் விட்மன் பாதிப்பும் பாரதியின் வசன கவிதைப் பாதிப்புமேயாம். - ‘புதுக்கவிதைக்காரர்கள் தாக்கப்படும் போதெல்லாம் 'பாரதி' என்னும் கவசத்தை வழக்கமாகக் காட்டுவார்கள். பாரதி வசன கவிதை என்னும் புதிய கவிதைத் துறையைத் தொட்டான்; அவன் தொட்டதைத் துலக்கக் கூடாதா என்பார்கள். இந்தக் கேள்வியைத் தமிழ்க்கவிதை மரபைப் போற்றுவார் காதில் போட்டுக் கொள்வதில்லை. 'பாரதிக்குப் பின்