பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 23 (அவற்றைப்பற்றித் தனிக்கட்டுரையே எழுத வேண்டும்) மலேசியக் கவிஞர் உலகநாதனுக்கும் தமிழ்க்கவிதை வரலாற்றில் உரிய இடமுண்டு. சிறுகதை, நாவல் போன்ற இலக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ள கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரும் சில நல்ல கவிதைகள் எழுதியுள்ளனர். நா.பா.வின் கவிதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. கடந்த பத்தாண்டுகளாகக் கவியரங்கங்களும் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கும் உதவப் பார்க்கின்றன. முடியரசன், அப்துல் ரகுமான், தமிழன்பன், முருகுசுந்தரம் - இவர்கள் பல கவியரங்களை அலங்கரித்திருக்கிறார்கள். எனினும் மற்றவர்களைவிட அப்துல் ரகுமான் தன் சிந்தனையாலும் கற்பனையாலும் வாக்கு வன்மையாலும் பல அவை களைக் கிறங்க வைத்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். - உறக்கம் என் ஒத்திகை மயக்கம் என் முற்றுகை ஜன்ம விழாவின் ஜனகன மன நான் என்று மரணம் பேசுவதாக இவர் பாடிய பாடல் ஓர் உயிருள்ள பாடல். இவரைப் பற்றி பின்னாலும் சொல்வேன். இந்த அளவோடு தமிழ் இலக்கண மரபை விட்டு வெகுதூரம் விலகிச் செல்லாமல் கவிதைகள் இயற்றியவர் களைப் பற்றிய என் கண்ணோட்டத்தை நிறுத்திப் புதுக்கவிதைக்கு வருகிறேன். யாப்பிலக்கணம், கவிஞன் சுதந்திரமாக ஒடி விளைாடு வதற்குக் குறுக்கே நிற்கிறது; கோடு போடுகிறது, என்பது புதுக்கவிதைக்காரர்களின் வாதம். எதுகையும் சீரும் செத்த