பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 22 ரகுநாதன், கே.சி.எஸ்.அருணாசலம் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஜீவாவின் கவிதை தருமத்தின் குரலாக ஒலிக்கிறது. திருமூர்த்தி பாமர மக்களின் இதயத்தைத் தம் கவி விரல்களால் வருடியிருக்கிறார். பட்டுக்கோட்டை திரைப்படத் துறையில் புகழ்க்கோட்டையை நிறுவியிருக் கிறார். ரகுநாதன் கவிதையில் இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா என்னும் விமவேகம் இருக்கும். அவர் கை விமர்சனத்தை அதிகம் தீண்டத் தொடங்கியதாலோ என்னவோ கவிதை அவரோடு ஊடத் தொடங்கி விட்டது. எனினும் அவரது ஆறு வேறு எந்த ஆற்றையும் விட அன்றன்று புதுமையாக வற்றாது வளைந்து ஒடுகிறது. இயக்கக் கவிஞர்கள் வறட்சியாகப் பாடுவார்கள் என்று முணுமுணுப்போர் இந்த ஆற்றில் மூழ்கி எழவேண்டும். 'அடடா என்று நான் சொல்லிச் சுவைத்த நல்ல கவிதைகளுள் இதுவும் ஒன்று. அதேபோல் இன்னொன்று கே.சி.எஸ். அருணா சலத்தின் 'கவிதை என் கைவாள்' என்னும் கவிதை. இத் தலைப்பைக் கொண்ட நூல், ஒரு வெற்றிகரமான அறுவடை. நூல் முழுவதும் அங்கதம், நகைச்சுவை, கிராமியத்தன்மை, நவீன அழகு, சமூக நோக்கு ஆகியவை கண்ணைக் கவரும் மணிகளாகச் சிந்திக் கிடக்கின்றன. இந்த ஐந்து கவிஞர்களிடமும் நடப்பியல் (Realism) கொடி கட்டிப் பறக்கிறது; மார்க்சியம் பட்டொளி வீசுகிறது. ஈழத்துக் கவிஞர்கள் சிலரிடமும் இந்த நடப்பியல் நன்கு வேரூன்றியிருக்கிறது. அவர்களுள் மஹாகவி, முருகையன், மு. பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர். அண்மையில் மறைந்த மஹாகவி'யின் குறும்பா ஒவ்வொன்றும் தமிழுக்குக் கிடைத்த பெரிய செல்வம்.