பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 21 விட்டுப் பார்த்தால் குறுகிய காலத்தில் காமராசன் தமிழ்க் கவிதை நிலத்தில் வேண்டிய அளவுக்கு புதுவெள்ளம் பாய்ச்சியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள முடியும். 'தமிழ் இலக்கியத்தின் நவீன கவி. உயர்ந்த குறிக் கோள்களை உடையவர்' என்று யுனெஸ்கோ மன்றம் இவருக்குப் பாராட்டிதழ் அளித்திருப்பது பொருந்தும் என்பதை இவரது 'சூரியகாந்தியும்' 'கறுப்பு மலர்களும்: உறுதிப்படுத்துகின்றன. வஞ்சிக்கோமான்விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோமான் விழிகள்., என்னும் சொல் அலங்காரம் நிறைந்த 'சூரியகாந்தியைக் காட்டிலும் கருத்து வளத்தாலும் புதிய சோதனை முயற்சிகளாலும் புரட்சி மணம் பரப்பு கறுப்பு மலர்களே” என்னைப் பெரிதும் கவர்கிறது. நிலாச் சோறு, சபதம், கறுத்தம்மா முதலிய கவிதைகள் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் குறிப்பிடத்தக்கன. சிலவற்றை என்னால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. சிலவற்றை என்னால் அனுபவிக்க முடிகிறது. 'பகுத்தறிவு, சோஷலிசம் என்ற கொள்கைத் தீபங்களை ஏந்தி வழி நடக்கும் காமராசனின் கவிதைகளில் புதுமை, தனித்தன்மை, நளினமான கற்பனைகள், சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றை நான் காண்கிறேன்" என்கிறார் தி.க. சிவசங்கரன். இக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. - புதியதோர் உலகம்செய்ய வேண்டுமென்ற இயக்கத்துடன் இரண்டறக் கலந்து சோஷலிசம், மனிதநேயம் (Humanism) முதலியவற்றிற்காகத் தெளிவாகவும் பலமாகவும் குரல் கொடுத்த பஞ்ச பாண்டவர்கள் என்று ஜீவா, வெ.நா.திருமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,