பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை . 20 சாகாவரம் பெற்று இருக்கின்றன, அவரது கண்ணப்பன் கிளிகள் உத்தியழகு வாய்ந்தது. வீராயி, தீண்டாமை என்னும் நச்சரவம் அரிசன மக்களைத் தீண்டும் கொடுமை யைச் சித்திரிப்பது. தமிழர்களின் மரபு வழி இலக்கியங் களில் அங்கங்கே தலைகாட்டும் சந்தங்கள் இவர் படைப்பு களில் புதிய பொலிவோடு உயிர் பெற்று உலவுகின்றன. கம்பதாசன் கவிதைகளில் சில நல்ல வரிகளைத் தொகுக்கலாம். பல பகுதிகளில் தெளிவில்லை. துரைமாணிக்கம் தனித்தமிழ் ஆய்வலர் தனித் தமிழில் சுவையான காவியம் படைக்க முடியும் என்பதற்கு இவரது ஐயை ஓர் எடுத்துக்காட்டு. துரை. மாணிக்கம் தனித்தமிழில் எழுதுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரோ அந்த அளவுக்கு வடசொல் கலந்து எழுதுவதில் ஆர்வங்காட்டுபவர் நா.காமராசன். 'வடமொழிக்குக் காளிதாசன் செய்த தொண்டைக் காட்டிலும் காமராசன் செய்யும் தொண்டே அதிகம்! என்று ஒரு தமிழ்ப் பேராசிரியர் சொன்னதாகக் கேள்விப் பட்டேன். இது மிகைப்படச் சொல்லப்பட்டதாயினும் காமராசனுக்கு அப்படி ஒரு போதை இல்லாமல் இல்லை. டி. எஸ். எலியட் தன்னுடைய பாழ் நிலம்’ (The Waste Land) என்னும் நெடுங்கவிதையை 'சாந்தி சாந்தி #T#@” (Shanthi Shanthi Shanthi) arcipi (plą#ĝG5#@prti; வடசொல்லை எடுத்து ஆண்டிருக்கிறார். அதேபோல் காமராசனும் வடசொற்களை எடுத்தாள்கிறார் போலும். வடசொற் கலப்பு என்னும் குறை பாரதிதாசனிடமும் இருந்தது. என்னிடமும் இருக்கிறது; வேறு பலரிடமும் இருக்கிறது; காமராசனிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது; அவ்வளவுதான். இக்குறையை மறந்து