பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 19 கடைசியில் சுரதாவின் கோவலன் எங்கே வந்து நிற்கிறான் பாருங்கள். இதேமாதிரி பிறிதோரிடத்தில் தீண்டாமை வேண்டாமை' என்கிறார். நல்ல கருத்தென்று நாம் விழிகளை ஒடவிட்ட மறுவினாடியிலேயே 'தீண்டத் தானே பிறந்தோம் ஆணும் பெண்ணும்' என்று அதற்கு மேலே நிற்கும் ஒரு வரி நம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்து கிறது. சுரதாவின் 'அமுதும் தேனும் என்னும் தொகுதியில் பாலுணர்வு அதிகமாகவே பெருகி வழிகிறது. 'நீங்க இப்போ படிச்சுக் காட்டின பாட்டு எல்லாம் பச்சையாப் புரிதுயுங்க! கேக்கிறதுக்கு ரொம்ப நல்லாருக் குங்க; எனக்கு இப்போ வயது அறுபது ஆவுது. இதைக் கேட்டதும் பழைய ஞாபகமெல்லாம் வருதுங்க" என்று அத்தொகுதிக்கு ஒர் அணிந்துரை தந்துள்ளார் ஒருவர். அதைத் தந்த தகுதிக்குரியவர் சென்னையில் வாழும் ஒர் குட்டரோகி” என்று தெரிகிறது. அவர் இப்போதும் வாழ்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. சுரதா கவிதைகள் எப்போதும் வாழவேண்டுமே என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். சுரதாவின் குணம் குற்றம் ஆகிய இருவகைப் பாதிப்புக்கும் ஆளானவர்களில் குறிக்கத்தக்கவர் இருவர். ஒருவர் முருகு சுந்தரம். மற்றொருவர் கூடுவாஞ்சேரி நீலமணி. - இன்னும் பாரதிதாசன் பாதிப்போடு முகிழ்த்த கவிஞர்கள் என்று கம்பத்ாசன், தமிழ்ஒளி, தாமரைக்குமரி, அண்ணாமலை, கா.சி.ஆனந்தன், சிற்பி, அப்துல் ரகுமான், துரை. மாணிக்கம், நா.காமராசன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் என்னையும் சேர்த்துக் கொள்வதில் எனக்குத் தடையில்லை. - இவர்களுள் தமிழ்ஒளி காலத்தை வென்ற கவிஞர்; அவர் இறந்துவிட்டாலும் அவர் இயற்றிய பாடல்கள் பல