பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 18 தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தையும் தன்னைப் பின்பற்றி எழுதும் ஒரு கவிஞர் பெருமன்றத்தையும் உருவாக்கிக் கொண்டவர். சொல்லாட்சி, உவமை, வரலாற்றுச் செய்திகள், சொல் விளக்கம் முதலியவை இவர் கவிதைகளில் சுடர்விடும் தனித்தன்மைகள். இத்தன்மைகள் குறித்து இவருக்கே ஒரு வகைப் பெருமிதம் உண்டு. பெருமையில்லாப் பாட்டெழுத மாட்டேன்; என்னைப் பின்பற்றி எழுதுதற்கோர் கூட்டமுண்டு என்னும் வரியில் அது பிரதிபலிக்கக் காணலாம். சுரதாவின் திறமையில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் அவரது திறமை அதிகமாகப் பாலுணர்வு பாடல்கள் எழுது வதற்குப் பயன்படுகிறதே, விழலுக்கு இறைத்த நீராகிறதே என்பதுதான் நமக்குள்ள வருத்தம். தொடாத வாலிபம், 'உதட்டில் உதடு', 'எச்சில் இரவு - இவையெல்லாம் இவருடைய நூல் தலைப்புகள். இடைக்காலச் சிற்றிலக் கியங்களில் ஆதிக்கம் செலுத்தி காலப்போக்கில் ஒளிந்து மறைந்த காமரசம், இவர் பாடல்களில் அடைக்கலம் புகுந்திருக்கின்றது. ஒன்றிரண்டு காட்டுவேன்: மாதவியும் கோவலனும் காவியப் பெருமக்கள், அவர்கள் பேசுகிறார்கள். 'மா' என்கிறான் கோவலன்; அதற்கு வித விதமாகப் பொருள் சொல்கிறாள் மாதவி; மா என்றான்; மையல் தையல் மா என்றால் பெருமை என்றாள், மா என்றான், செங்கை மங்கை மா என்றால் கருமை என்றாள், மா என்றான் குதிரை வண்டு' மாமரம், என்றாள், நீ தே மா என்றான், 'நான் மான் என்றாள் மானுக்கேன் ஆடை? என்றான்.