பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 17 நல்ல பழக்கம். அதனால்தான் அந்தக் காலத்து அரசியல் குழப்பமில்லாமல் இருந்தது' என்று கூறினார். (இது வசனம் தான். எனினும் கவிஞரின் பார்வைத் தெளிவைக் காட்டவே எடுத்தாளப்படுகிறது) இது பதினெட்டு மொழிகளிலும் பரப்பவேண்டிய கருத்து என்று கருதியோ என்னவோ இதைச் செப்பு மொழி பதினெட்டில், சிந்தி உள்ளார். இப்படித் தனிமனித வழிபாடு, நிபந்தனை இவற்றில் மட்டுமின்றி, மொழி, கடவுள், சமூகப் பொருளாதாரக் கொள்கைகளுள்ளும் முன்னுக்குப் பின் முரண்படுகிறார். இந்தக் குழப்பங்களில் ஆழ்ந்து போகாமல் வெளியேறி ஆழமாகச் சிந்தித்து உள்ளத்தின் ஒளியோடு எழுதுவாரானால் அவர் உயர்ந்து நிற்க முடியும். ஒரு முறை தென்றல் இதழில் 'பாரதியின் குணமும் தோஷமும்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரை, இவருக்கும் பொருந்தும். இவர் கவிதைகளில் பாராட்டத்தக்க குணம் இல்லாமல் இல்லை. எனினும் 'தோஷம் அதிகமாவதற்கு இடம் கொடுக்கிறாரே என்று தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இவர் தன்னோடு முரண்படட்டும், ஆனால் அடிக்கடி முரண்படும்போது இவர் வளர்கிறாரா அன்றி வளைகிறார்ா என்றல்லவா ஐயப்பட வேண்டியிருக்கிறது. "எத்தகைய விமர்சனத் துக்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். கூடிப் புகழ்வோரைப் போலவே குற்றம் சொல்வோரையும் நான் நேசிக்கிறேன்' என்று கவிஞர் குறிப்பிடுவதால் என் விமர் சனத்தை நேச உணர்வோடு ஏற்பார் என்று நினைக்கிறேன். சுரதா ஓரிரண்டு தடவை அரசியல் சட்டையை மாற்றிக் கொண்டவர். என்றாலும் எந்த அரசியல் நோக்கோடும் கவிதை எழுதியவரல்லர். இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்களே அந்தக் கலையியல் அடிப்படையில் எழுதியவர். கவிதைத் துறையில்