பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

* எதிர்காலத் தமிழ்க்கவிதை * 16 இறக்கைக் கட்டிப் பறப்பதில் காட்டும் வேகமே அதிகம். அரசியல் தலைவர்களைத் துதித்தும் தூற்றியும் இவரைப் போல் பாடியவர் ஒருவரும் இல்லை. - திறமையில்லை, அறிவில்லை, தினந்தோறும் பேருலகை தன் நாவால் அளவெடுக்கும் ஞானமில்லால் ஏதுமில்லை. என்று எந்த நேருவைப் பழித்தாரோ அந்த நேருவை 'அறிவன் என்றும் ஞானவான் என்றும் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே உணர்ந்து, போதி மரப்புத்தன் போய் விட்டான் என்றிருந்தோம் பாதிவழி போன அவன் பண்டிதனாய்த் திரும்பிவந்தான். என்று பாராட்டியுள்ளார். இப்படி நேருவைப் பற்றி மட்டுமல்ல, காமராசர் முதல் கருணாநிதி வரை தனி மனிதர்களை அதிகம் பழித்தவரும் இவரே. அதிகம் பாராட்டியவரும் இவரே. இவர் வாக்குமூலப்படி இவரது 'முதல் மூன்று தொகுதிகள் ஏராளமான பக்கங்களைக் கொண்டவை. அவற்றில் அரசியல் அதிகம். போற்று தலும் தூற்றுதலும் அதிகம். தனிமனித வழிபாடுகள் அதிகம்... சிறுமொழித் தாக்குதல்கள் அதிகம்...' எனினும் அவை "காலத்தின் கணிதங்கள்' என்று சமாதானம் சொல்லுகிறார் கவிஞர். இச்சமாதானம் இப்போது வெளிவந்துள்ள கவிஞரின் நான்காம் தொகுதியில் சொல்லப்படுகிறது. இதே தொகுதியில் நேருவின் மகள் இந்திராகாந்திக்கு கவிஞர் சோஷலிசம் என்னும் சிவப்புச் சேலை கட்டிப் பார்த்த 'செவத்தம்மா என்னும் பாடலும் இருக்கிறது. இச்சேலை கட்டிப் பார்ப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் வெள்ளைச் சேலை கட்டிய விதவையால் அரசியலில் விபரீதங்கள் உண்டாகின்றன என்னும் தொனியில், 'கணவன் இறந்ததும் மனைவி உடன் கட்டை ஏறவேண்டும் என்று அந்நாளில் இருந்த பழக்கம்