பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா ❖ 15

என்றால் இவர் ‘தமிழச்சி’ என்பார். பாரதிதாசன் முதல் தொகுதியில் ‘சுதந்திரம்’ என்றொரு கவிதை காணப்படுகிறது. அதே தலைப்பில் அவர் பாடிய அதே அகவற்பாவில் அதே நடையில் இருவரும் ஒரு பாடலை எழுதியுள்ளார்:

அக்காஅக்கா என்றுநீ அழைத்தாய்
அக்காவந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே

இது பாரதிதாசனின் பாட்டு.

இவரோ,

அக்கா என்றுநீ அழைத்தழைத் திருந்தால்
புதரில் ஆகும் கோவைப்
பழமா சுதந்திரம் பறித்தவள் கொடுக்க?

என்கிறார். இவ்வளவுதான் வேறுபாடு.

பாரதிதாசனின் பாதிப்பு அடியோடு இருக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அந்தப் பாதிப்பிலும் வளர்ச்சிக்குரிய அறிகுறி அமைய வேண்டாமா? ‘தம்மைவிடத் தம் மக்கள் அறிவுடையவர்களாக விளங்க வேண்டும்’ எனக் குறள் கூறவில்லையா? வாணிதாசனின் ‘இரவு வரவில்லை’ என்னும் பன்னிரண்டாம் கவிதைத் தொகுதியில் தான் மேற்கண்ட கவிதை காணப்படுகிறது. அந்த நூலைப் படித்த என் நண்பர் ஒருவர் ‘இப்படி எழுதினால் தமிழ்க் கவிதையுலகில் நிச்சயமாய் இரவு வரும்’ என்று கோபமாகச் சொன்னார்; என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

கண்ணதாசனும், சுரதாவும் இன்று நாடறிந்த கவிஞர்கள் (Popular Poets). கண்ணதாசன் தன் கவிதையில் காட்டும் வேகத்தைவிட அரசியல் காற்றில் அங்குமிங்கும்