பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க்கவிதை ❖ 14

எத்தனை பேர்,எரி நட்சத்திரமாய் விழுந்து மறைவர்? இவற்றுக்குக் காலமே பதில் சொல்ல வேண்டும்.

எனினும் ஒரு சிலரைத் தொட்டுக் காட்டுவேன்.

அடிநாட்களில் பாரதிதாசனையே பின்பற்றத் தொடங்கிக் காலப்போக்கில் தத்தமக்கென்று தனிப்பாதை அமைத்துக் கொண்டவர்களையும் முழுக்க முழுக்கப் பாரதிதாசனையே அடியொற்றி நடந்தவர்களையும் இங்கே நான் குறிப்பிடவேண்டும். இந்த இரு பிரிவுக்குள்ளும் கண்ணதாசன், சுரதா,வாணிதாசன், முடியரசன், பொன்னிவளவன், வேழவேந்தன் ஆகியோர் அடங்குவர்.

இவர்களுள் முடியரசனும் வாணிதாசனும் தமிழ்மொழி, நாடு, இனப்பழமையில் ஈடுபட்டு பாடியவர்கள். இவர்களைப் பழமை கற்பனைவாதிகள் (Romantic Revivalists) எனலாம். இருவரும் சங்க இலக்கியப் பயிற்சியும் இலக்கண அறிவும் நிரம்பப் பெற்றவர்கள். முடியரசனின் 'பூங்கொடி’யும், 'வீரகாவியமும், 'பாண்டியன் பரிசைக் காட்டிலும் அளவில் பெரியன. எனினும் அவை பரிசுக்குரிய இடத்தைப் பெறவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ('பாண்டியன் பரிசு' 'புரட்சிக்கவி' அளவு வெற்றி பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.) எனினும் 'முடியரசன்கவிதைகள்' என்னும் தொகுதியில் சில உயர்ந்த பாடல்கள் உள்ளன.

பாரதிதாசன் பரம்பரையில் ஒரே மாதிரிக் கவிதைகள் எழுதும் குற்றத்துக்குப் பலர் இலக்கானாலும் அதிகமாக அதற்கு ஆளானவர் வாணிதாசனே. இவர் பாரதிதாசனை வரிக்குவரி பின்பற்றியவர். அவர் அழகின் சிரிப்பு என்றால் இவர் 'எழிலோவியம் எனத் தம் நூலுக்குப் பெயர் வைப்பார். பாரதிதாசன் தமிழச்சியின் கத்தி'