பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா❖13

கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது அவரை நம்மால் ஒரு நல்ல சொல்லோவியராக ஏற்க முடியவில்லை.

பாரதிதாசனையும் மேற்கண்ட மூவரையும் மதிப்பீடு செய்யும்போது க.நா.சு.வின் கணிப்பைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது: "பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை பாரதிதாசன் கவிதையில் வேகம் காட்டியது. தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதையில் எளிமை காட்டியது. ச.து.சு. யோகியாரின் கவிதையில் அலங்காரம் காட்டியது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதையில் வசனமேயாகிவிட்டது என்று சொல்லலாம்" (விமரிசனக் கலை, பக்-58)

நான் மீண்டும் சொல்கிறேன்: என் பார்வையில் பாரதிக்குப் பிறகு எல்லா வகையிலும் பாரதிதாசன் ஒருவர்தான் தலை நிமிர்ந்து நிற்பதாகப் படுகிறது. அவர் ஒருவரால்தான் தனக்கென்று ஒரு பரம்பரையைத் தோற்றுவிக்க முடிந்தது.

என் நடை தம் நடை:என்யாப்புத் தம்யாப்பென்று
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்.

என்று அவரே தம்மைப் பற்றிப் போட்டுக் கொண்ட கணக்கு தவறானதல்ல. "பாரதியாருக்கு ஒரே ஒரு பாரதிதாசன் கிடைத்தார். ஆனால் பாரதிதாசனுக்கோ பல தாசர்கள் கிடைத்தனர்" என்று சுரதா சொல்வதும் சரியானதே.

பாரதியை ஞாயிறு என்றால் பாரதிதாசனைத் திங்கள் எனலாம். அந்தத் திங்களைச் சுற்றி விளங்கும் விண்மீன் களைப்போல இன்று கவிஞர் பலர் உள்ளனர். அவர்களுள் எத்தனை பேர் துருவ மீன்போல் நின்று சுடர் விடுவர்?