பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க்கவிதை ❖ 12

தெய்வநிந்தனை, தனிமனிதநிந்தனை, பார்ப்பனநிந்தனை முதலியவை அவரிடம் உள்ள குறைபாடுகள் என்று குறிப்போரும் அவற்றைப் பெரிதுபடுத்தி அவரைப் புறக்கணிக்க முடிவதில்லை. பேராசிரியர் சாமிநாதன் நடையில் சொல்வதென்றால் இவையெல்லாம் "நல்ல கறவைப் பசுவின் முரட்டு முட்டல்; திவ்யமான - தேன்கூட்டில் பதுங்கிக் கிடக்கும் தேனீக் கொட்டல்." இம்முட்டலையும் கொட்டலையும் வாங்கிக் கொண்டு பாரதிதாசனுக்குத் தலைவணக்கம் செய்வோர் அநேகர்; அதற்குக் காரணம் அவரது கவித்துவம்தான்.

இந்தக் கவித்துவத்தைப் பாரதி தலைமுறைக் கவிஞர்களிடம் முழுமையாகக் காணமுடியவில்லை.கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடல்களில் உள்ள சிறப்பியல்பு எளிமைதான். சிறுபிள்ளைகளும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அவ்வளவு எளிமையாகப் பாடுவதில் வல்லவர்; அதற்காகச் சிறுபிள்ளைகளுக்கு எழுதுவதைப் போலவே எழுத வேண்டுமா, என்ன? அவரது 'மருமக்கள் வழி மான்மியத்தையும் சில மொழிபெயர்ப்புப் பாடல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால்,அவர் அழ.வள்ளியப்பாவின் முன்னோடி என்னும் பெருமைக்குரியவர்; அவ்வளவே.

ச.து.சு. யோகியாரின் 'அகல்யையும் கண்மணிராஜ'மும் நம் மனத்தில் நிற்கக்கூடியவை. மற்ற கவிதைகளைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

நாமக்கல் கவிஞரைப் பற்றியும் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. பாரதி அவரை நல்ல ஓவியரென்று பாராட்டியதாகத் தெரிகிறது. ஒருவேளை ஓவியத் துறையில் அவர் கவன்ம் செலுத்தியிருந்தால் நல்ல ஒவியராக விளங்கியிருக்கக்கூடும். ஆனால் அவர் படைத்த