பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o மீரா & 29 நூற்றாண்டுக் கவிதை அனைத்தையும் குறிக்கும் பொதுச்சொல். சுவை புதிது, பொருள் புதிது, வளம்புதிது, சொற் புதிது" என்று தன் கவிதையின் இயல்பைக் கூறி அதற்கு நவ கவிதை (புதுக்கவிதை) என்று பெயர் சூட்டுகிறான் பாரதி தான் இந்த நூற்றாண்டுக் கவிதையின் முதல்வன் என்ற முறையில், ஆக புதுக்கவிதை என்பது Modern Poetry என்னும் விரிந்த பொருளில் கவிதை, கட்டற்ற கவிதை, வசன கவிதை ஆகியவற்றையும் உட்கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். o காமராசன் 'கறுப்பு மலர்கள் தலைப்பின் அடியில் 'கவிதைகளும் சில வசன கவிதைகளும்' என்று குறிப்பிட்டுள்ளதை இங்கே கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். நான் என்னதான் சொன்னாலும் பெயரில் என்ன இருக்கிறது' என்று புதுக்கவிதைக்காரர்கள் கேட்கக் கூடும். போகட்டும். உருவத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம். உருவு கண்டு எள்ள வேண்டாம். உள்ளடக்கம் என்னும், அச்சானி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்ப்போம். - - ஒரு சில புதுக்கவிதைகள் உள்ளடக்கத்தில் உயிர் பெற்றுள்ளன. ந.பிச்சமூர்த்தியின் 'மழை பூக்காரி' 'சினுக்கம் ஆகியவையும் வைதீஸ்வரனின் மைலாய் வீதி ஞானம் ஆகியவையும் சி. மணியின் சாதனையும்’ குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. பெரும்பாலான புதுக்கவிதைகளின் உள்ளடக்கம் உயர்ந்தனவாய் இல்லை; உள்ளம் கவர்வனவாய் இல்லை. 1968 டிசம்பர் தாமரை யில் புதுக்கவிதையின் உள்ளடக்கம் பற்றிப் பேராசிரியர் நா. வானமாமலை ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில்