பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 30 புதுக்கவிதையில் பிராய்டிசம் ஓங்கி உள்ளது என்றும் பத்து வித்மான குறைக்குரிய போக்குகள் குடியிருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இறுதியாகக் குறிப்பிடுவது தெளிவின்மை (Obscurity) egy Gib. புதுக்கவிதைகள் பல புரியவில்லை என்றால் சங்கக் கவிதைகள் புரிகின்றனவா என்று கேட்கிறார்கள். சங்கக் கவிதைகளில் உள்ள சொற்கள் பெரும்பாலும் வழக்கிறந்த சொற்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பாரதிக்குப் பின்பாமரர்களையும் கவர வேண்டும் என்னும் இலக்கிய நோக்கம் வலுவடைந்து உள்ளது. அதை இவர்கள் திசைதிருப்பும் முயற்சிக்குச்சங்க கவிதைகளைப் பக்கபலமாகக் காட்டப் பார்க்கிறார்கள். அவற்றிற்கு உரைகள் இருக்கின்றன. ஒருவேளை இவர்கள் கவிதை களுக்கும் என் ஆசிரியர் திரு.சி. கனகசபாபதி போன்றோர் உரை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ? நான் இப்படிச் சொல்வதற்காக என்மேல் ஆத்திரப்பட்டுப் பயனில்லை. - - - 'கொச்சையாகவோ புரியாத மாதிரியிலோ எழுதுவது தான் புதுக் கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்துவிடுகிறது - இப்படிப் புதுக்கவிதைக் காரர்களுள் ஒருவரான சார்வாகன் கூறுகிறார். (கசடதபற மார்ச் 1971) இவரைப்போல் மற்றவர்களும் தன்னையே கண்டுகொள்கிற நேர்மையும் தீரமும் பெறவேண்டும். இதுதான் என் வேண்டுகோள். இதுவரை இன்றைய தமிழ்க்கவிதையின் கையிருப்பைக் காட்டினேன்; அதாவது குறையையும் நிறையையும் காட்டினேன். இவற்றை நெஞ்சில் நிறுத்திப் பார்த்தால் நீங்களே எதிர்காலத் தமிழ்க்கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கண்டுகொள்ள முடியும். எனினும் முடிவாகச் சிலவற்றைச் சொல்வேன்.