பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா : 31 தமிழ்க்கவிதைக்கு இரண்டாயிரம் ஆண்டுக் காலப் பெருமையுண்டு; மரபு உண்டு. கேரள நாவலாசிரியர்தகழி சிவசங்கரப் பிள்ளை தங்கள் மொழியில் திருக்குறளைப் போல் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் ஒரு பழமையான நூல் இல்லையே என்று கூறியதாக ஏதோ ஒரு பத்திரிகை யில் படித்த ஞாபகம். எனினும் இங்குள்ள சிலர் மரபே புதிய கவிதை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று கருதுவது வியப்பாயிருக்கிறது. பாரதிக்கு மரபு தடையாக இருந்ததில்லை. மாணிக்கவாசகர் திருப்பள்ளி எழுச்சி பாடினார்; தொண்டரடிப் பொடியாழ்வார் பாடினார். இருவரும் ஆண்டவனை வைத்துப் பாடினார்கள். பாரதி அவ்விருவரின் பள்ளி எழுச்சிகளையும் படித்து, தான் வாழ்ந்த காலத்தையும் மறக்காமல் பாரத மாதாதிருப்பள்ளி எழுச்சி பாடவில்லையா? திருப்பாவையும் திருவெம்பா வையும் கண்ணதாசனுக்கு ஒரு 'தைப்பாவை படைக்கத் தடையாயிருந்தனவா? இல்லை. எனவே தமிழ்க் கவிஞர்கள் மரபைக் கண்டு மருள வேண்டாம். மாறாக பழைய இலக்கியங்களைப் பயில வேண்டும். பழைய இலக்கியம் ஒவ்வொன்றும் புதுமை இலக்கியங்களின் ஊற்றிடம் என்பதை உணர வேண்டும். சிலப்பதி காரத்தைப் பயின்ற மூவர் 'கண்ணகி புரட்சிக் காப்பியம், 'சிலம்பின் சிறுநகை', 'விதியோ வீணையோ என்னும் மூன்று குறுங்காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். கம்பனின் அகல்யை வெள்ளகால் சுப்ரமணிய முதலியாரிடமும் ச.து. சு. யோகியாரிடமும் சிங்காரம் பெற்றிருக்கிறாள். (இராமனின் கால் வண்ணம் கண்ட அகல்யை எத்தனையோ சிறுகதை ஆசிரியர்களின் கைவண்ணம் கண்டும் இருக்கிறாள்.) இந்த உண்மையை மறவாது கவிஞர்கள் மரபில் கால் ஊன்றி நின்று புதுமைக் கனியை எட்டிப் பறிக்க வேண்டும். -