பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை . 32 புதுக்கவிதைக்கும் தமிழில் மரபுண்டு என்கிறார் சி.கனகசபாபதி. இணைக்குறள் ஆசிரியப்பா, உரைப் பாட்டு - இவற்றின் வளர்ச்சியே புதுக்கவிதை என்பது அவர் கருத்து. தமிழ் இலக்கணம் எவ்வளவு வேண்டு மானாலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது. அகவற்பாவில் - எதுகை மோனை இல்லாமல் எதையும் எளிதாகச்சொல்ல வாய்ப்பிருக்கிறது. எனினும் இறுக்கம், செறிவு நுட்பமான வெளியீடு, உருவகம், குறியீட்டியல் இவற்றையெல்லாம் காட்டுவதற்குப் புதுக்கவிதை தேவைப்படுகிறது என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் இவற்றை அகவற் பாவில்கூடக் காட்ட முடியாதா? 'முரசொலி பொங்கல் மலரி'ல் கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய ஒரு கவிதையைக் கண்டேன். அதில் அவர்கள் சொல்லும் எல்லா அழகும் கொலுவிருக்கக் கண்டேன்: சமாதான தேவதை ஊர்வலம் வருகிறாள் காகித வீதியில் கருட வாகனத்தில் சமாதானதேவதை ஊர்வலம் வருகிறாள் உலோகப் பறவைகள் ஒலிமலர்துவ கர்ப்பப் பூக்களின் பன்னீர் மணக்க நகரும் சக்கர நாத சுரங்கள் மேளங்கொட்ட வெண்புறாச்சிறகுத் தோரணம் ஆட சமாதான தேவதை ஊர்வலம் வருகிறாள்