பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா : 33 என்று செல்லும் இக்கவிதைக்கும் இதைப் போன்ற வேறு சில கவிதைகளுக்கும் 'சித்திர மின்னல்கள் என்று தலைப்பிட்டுள்ளார் கவிஞர். இதில் உலோகப் பறவைகள்' 'ஒலி மலர் என்னும் சொற்களை உச்சரிக்கும்போதே யுத்த விமானங்கள், குண்டுகள் என்னும் பொருளை உணர முடிகிறது. பிறகு பாடல் முழுவதும் குறியீட்டியல் (Symbolism) அமைந் திருப்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. நகரும் சக்கர நாதசுரங்கள்’ என்று பீரங்கி வண்டியைக் கண் முன்னர் காட்டுகிறார் கவிஞர். எவ்வளவு அற்புதமான படிமம். (Imagery). ஒரு மின்னல் வெட்டும்போது ஆகாயம் முழுவதும் ஒளி பரவுமே அப்படி ஒவ்வொரு சொல்லும் அலை அலையாய்ப் போர்க்களக் காட்சியை நம் மனத்தில் கொண்டு வந்து நிறுத்திக் காட்டுகிறது. அதனால்தானோ என்னவோ இக்கவிதையைச் சித்திர மின்னல்களுள் ஒன்றாக்கியிருக்கிறார்கவிஞர். எல்லாவற்றைக்காட்டிலும் இக்கவிதைக்குச் சமாதான தேவதை' என்று மகுடமிட்டுப் போலி அரசியல்வாதிகளின் ஆதிக்க வெறியர்களின் முகத்திரையைக் கிழிக்கும் கவிதை நோக்கம் சிறப்பா யுள்ளது. தலைப்பில் அங்கதம் (Satire) நிழலாடுகிறது. இந்தப் பாட்டு அகவல் வடிவத்தில் அமைந்ததே. இந்த மாதிரி தெளிவாகவும் எளிதாகவும் உயர்வாகவும் புதுக் கவிஞர் என்று சொல்லிக் கொள்வோர் எவரும் படைப்ப தாகத் தெரியவில்லையே; எனவே 'புதுக் கவிஞர்கள் இலக்கணத்தைப் புறக்கணிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதை விட்டுவிட்டுக் குறைந்த அளவு அகவலிலாவது தங்கள் சோதனையை நிகழ்த்த வேண்டும். மரபுக் கவிஞர்கள் எழுதும் பாடல்களில் நவீனத்தன்மை (Modernity) இல்லை என்பது புதுக்கவிதைக்காரர்கள்