பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 34 தொடுக்கும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று. இவர்களுடைய கவிதைப் பொருள் பட்டியலை விரித்துச் சொல்லத் தேவையில்லை. ரோஜாப்பூ, தென்றல், சோலை, வெண்ணிலா, விட்டில் இப்படியே பல என்கிறார் சி.கனகசபாபதி. இதில் உண்மை இல்லாமல் இல்லை. பல கவிஞர்கள் இன்னும் பழமைப் பாசியை விட்டு விலகி வர முடியவில்லை. அன்றாட வாழ்க்கை அனுபவங் களையோ, சிக்கல்களையோ பாடுவது இல்லை. பாரதிதாசன் குயிலையும் தென்றலையும் மட்டுமா பாடினார்? குடும்பக் கட்டுப்பாட்டையும் பாடினார். இரண்டாம் உலக போரையும் இட்லரின் வீழ்ச்சியையும் பாடினார். இந்தக் காலத்துப் பந்து விளையாட்டு Badminton ஒன்றை வைத்து அருமையான காதல் கவிதை (பந்துப்பட்ட தோள்) ஒன்றைப் பாடியிருக்கிறாரே! 'தீபம் தீபாவளி மலரில் நான் எழுதிய வாபஸ் கிடையாது” என்னும் கவிதையிலும் இந்த நவீனத்தன்மை இருக்கிறது. கருத்து சாதாரணமானதுதான்; பழைய ஆதாம் ஏவாள் காதல்தான். வணிகன் மகளே வணிகன் மகளே என்னும் முதல் வரிகூட அகவன் மகளே அகவன் மகளே என்னும் பழைய அகப்பாட்டு வரியின் போலிதான் (Parody). எனினும் இந்த நூற்றாண்டு வியாபார உலகத்தின் நிபந்தனை இந்தக் காதற் கவிதையில் காட்டப்பட்டிருக் கிறதா இல்லையா?. இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல் எதையும் சுவையாகச் சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் நிறைவேறியிருக்கிறதா இல்லையா? The poet's purpose is not just to say The moon is like the lady's face But to express it in a different way And within a certain grace என்று ஒரு கவிஞன் நயம்பட நளினமாக உரை என்கிறான்.