பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 35 கவிஞர்கள் எளிய நடையில் எழுத வேண்டும். இயல்பான பேச்சின் குரல் கவிதையில் கேட்க வேண்டும் என்பதும் போற்ற வேண்டிய ஒரு கருத்து. - ஊருக்குக் கிழக்கே உள்ள - பெருங்கடல்,...(பாரதிதாசன்) கூடிய மட்டிலும் யோசித்தனன் (பாரதிதாசன்) ஒரே ஒரு கேள்வி உனை நான் கேட்கிறேன் (சுரதா) இப்படி இயல்பான நடையில் கவிதை வேகங்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அது தீண்டத்தகாததாகி விடும். - * இறுதியாக நான் குறிப்பிடப்போகும் உள்ளடக்கம்தான் ஒவ்வொரு கவிஞனும் முதன் முதலில் கவனிக்க வேண்டியது. கவிதைக் கலை என்பது பொழுதுபோக்குக் கலையல்ல; அது விஞ்ஞானத்தைப் போல மனித வாழ்க்கைக்குப் பயன்படவேண்டும்; சுதந்திர, சமத்துவ சகோதரத்துவ சமூகத்தை உருவாக்க உதவ வேண்டும். - 'மனிதன் - இந்தச் சொல் மனிதன் கண்ட சொற்களில் மகத்தான சொல் என்கிறார் கார்க்கி. இச்சொல்லின் பொருளைப் புரிந்து ஒவ்வொரு கவிஞரும் மனிதத் தன்மையைப் போற்ற வேண்டும். 'கவிதைகளில் தெய்வத் தன்மை இருக்கிறது என்கிறார்கள், அது வேண்டாம்! மனிதத்தன்மை இருந்தால் போதும் என்பார்பாரதிதாசன். சகல துறைகளிலும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக ஆவேசக் குரல் எழுப்புவன்தான் உயர்ந்த கவிஞன்; இலட்சியக் கவிஞன். வியத்நாம், ஏகாதிபத்திய நெருப்பில் வெந்து தவிக்கும்போது எனக்கென்ன என்று வீணை வாசிப்போன் ஒரு பாடகன் ஆகலாமே ஒழியக் கவிஞனாக ஆக முடியாது. வங்காள தேசம் வாடிக் கருகும்போது