பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 36 'கிரெளஞ்சவத்திற்குக் கேள்வி இல்லையா' என்று எந்த உள்ளம் கேட்கிறதோ அந்த உற்றம்தான் கவிதை உள்ளம். மனித உள்ளம். ஆங்கிலக் கவிஞன் பைரன் கிரேக்க மக்களோடு சேர்ந்து தனது நாட்டு அரசாங்கத்திற்கெதிராகப் போராடிய செய்தியை நாம் அறிவோம். கிரேக்கத்தின் எழுச்சிக்கு அவன் எப்படியெல்லாம் பாடினான். ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஆதரித்துப் பாடினானா? இல்லை. காரணம். அவன் ஒரு மனிதாபிமானி. - இந்த இடத்தில் கவிஞனுக்கு விசாலப் பார்வை வேண்டும் என்பது தெரிகிறது அல்லவா? பாரதிக்குப்பின் நாடு, மொழி, இனப்பற்றுக்களுக்காகப் பாடிய கவிஞர்கள் எண்ணிக்கை மிகுதி. தமிழ்த் தேசியத்தைப் போற்றிய பலர் சர்வ தேசியத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். இது தவறான போக்கு, கவிஞர்களின் பார்வை நானிலம் முழுவதும் படிய வேண்டும். நான்கு சுவர்களுக் குள்ளேயே படியக் கூடாது. இதை இப்படி ஆங்கிலத்தில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்: poets should develop a broader loyalty, not mere border loyalty. தமிழ்க் கவிஞர்கள் இரு நாடுகளின் ஒற்றுமை வளர்க்கும் சங்கங்களைப் பாடவேண்டும். பண்பாட்டினை வளர்க்கும் சங்கங்களைப் பாடவேண்டும். இன்றைய தமிழ்க் கவிதை தனிமனித வழிபாட்டுக்குப் பயன்படுகிறது என்று ஏற்கெனவே சொன்னேன். பிடித்தால் அரசியல் தலைவர்களை உச்சியில் ஏற்றுவதும் பிடிக்காவிட்டால் உருட்டி விடுவதும் சில கவிஞர்களுக்கு விளையாட்டு. இந்த விளையாட்டில் அழகோ, நாகரிகமோ இல்லை. தலைவர்களைப் புகழட்டும், ஆனால் தத்துவ ரீதியாகப் பார்த்துப் புகழ வேண்டும். மாயாகோவ்ஸ்கி லெனினைப்பற்றிப் பாடியிருக்கிறார்.